றைனோ குழுமம் தமது ந Pண்ட கால மூலோபாய இலக்குகளை எய்தும் வகையில் பேண்தகைமை அபிவிருத்தி இலக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

இதனூடாக பேண்தகைமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்ற தாக்கத்தை குறைப்பதற்கான தமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.

பரந்தளவு சமூக பொறுப்பு வாய்ந்த றைனோ, பேண்தகைமை என்பது தொடர்பில் எப்போதும் முக்கியத்துவமளித்து வருகின்றது. கடந்த ஐந்து தசாப்த காலப்பகுதியில், தமது வியாபார நடவடிக்கைகளினுள், பேண்தகைமை செயற்பாடுகள் தொடர்பில் றைனோ அதிகளவு முக்கியத்துவம் வழங்கி வருவதுடன், சமூக நலன்புரிச் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்திய வண்ணமுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை கவனத்தில் கொண்டும், பேண்தகைமை அபிவிருத்தியை மேம்படுத்துவது தொடர்பில் காணப்படும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் ஆழமான
ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, அவற்றின் பிரகாரம் பேண்தகைமை நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

“மக்கள், தயாரிப்பு, சமூகம் மற்றும் புவி” ஆகிய நான்கு பேண்தகைமை தூண்களின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள றைனோ, 2025 ஆம் ஆண்டை நோக்கியதான தமது பேண்தகைமை பயணத்தில் முக்கிய
அங்கமாக, பேண்தகைமை அபிவிருத்தியை உருவாக்கும் வகையில் தமது வியாபார மூலோபாயத்தை மீளமைத்துள்ளது.

தமது பயணம் தொடர்பில் ஹைனோ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.ஜே.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில்,

“பங்காளர் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வை கட்டியெழுப்பல் தொடர்பில் பரந்தளவு குறிக்கோள்களை றைனோவின் பேண்தகைமை அபிவிருத்தி நோக்கம் கொண்டுள்ளது. அத்துடன் நாம் இயங்கும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது தொடர்பில் பங்கேற்கும் சமூகங்களையும் தொடர்ச்சியாக
இணைத்து செயலாற்றி வருகின்றோம். இந்த நான்கு பேண்தகைமை செயற்பாடுகளையும் அறிமுகம் செய்வதனூடாக, சமூக மற்றும் பொருளாதார பேண்தகைமைக்கு வலுவூட்ட முடியும் என்பதில் நாம்
நம்பிக்கை கொண்டுள்ளதுடன், எதிர்காலத் தலைமுறைகளுக்காக சூழலின் பாதுகாப்பை பேணுவது தொடர்பிலும் பங்களிப்பு வழங்க முடியும் என கருதுகின்றோம். எமது நான்கு பேண்தகைமை
தூண்களுடன் எமது வியாபார மூலோபாயத்தை மீளப்பதனூடாக, சூழல் மற்றும் சமூகத்துக்கு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம் – இதனூடாக நீண்ட காலம்
நிலைத்திருக்கும் பெறுமதியை உருவாக்கி, எமது தேசத்தை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும் என
கருதுகின்றோம்.” என்றார்.

நான்கு செயற்திட்டங்களினூடாக மீள்வனாந்தரச் செய்கை, ஆமை பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம் மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான வலுத் தீர்வுகள் போன்றன தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இந்த
திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக சமூக மற்றும் சூழல்சார் அனுகூலங்களை பெற்று, தேசத்துக்கு நேர்த்தியான தாக்கத்தை
ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்த பேண்தகைமை செயற்பாடுகளில் பரந்தளவு தலைப்புகள் அடங்கியுள்ளதுடன், அவற்றினூடாக ஏற்கனவே காணப்படும் சமூக பொருளாதார மற்றும் சூழல்சார் இடைவெளிகளை நிவர்த்தி செய்ய
எதிர்பார்க்கப்படுகின்றது. மீள்வனாந்தரச் செய்கைத் திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 10 வெவ்வேறு பகுதிகளில் 1500 கும்புக் மரங்களை மீள்நடுகை செய்வதற்கு றைனோ பங்களிப்பு வழங்கும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் மீள்நடுகை
செய்யும் மரங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பதற்கும் றைனோ திட்டமிட்டுள்ளது.

நாட்டின் வனாந்தரப் பகுதியின் அடர்த்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆமை பாதுகாப்பு திட்டத்தினூடாக, இலங்கையில் காணப்படும் ஆமைகளின் நலன்புரி நடவடிக்கைகளை பாதுகாப்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை குறிப்பிடத்தக்களவு இனப்பெருக்கமடையச் செய்ய பங்களிப்பு வழங்குவது குறிக்கோளாக அமைந்துள்ளது. 2019 ஒக்டோபர் முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தென் மாகாணத்தில் இனங்காணப்பட்ட பகுதிகளில் ஆறு ஆமை குஞ்சு
வளர்ப்பகங்களை நிறுவ றைனோ முன்வந்துள்ளது. மேலும், காயமடைந்த ஆமைகளுக்கு சிகிச்சை வழங்கும் வகையில், சிகிச்சை தாங்கிப் பகுதிகளும் நிறுவப்படும். ஆமை பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கரையோரப் பகுதிகளில்காணப்படும் அறிவித்தல் பலகைகளில் அறிவிப்புகளை வெளியிடுவதற்குமம் றைனோ திட்டமிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் அரச மற்றும் அரச சார்பற்ற கழிவு மீள்சுழற்சியாளர்களுடன் இணைந்து தமது கழிவு முகாமைத்துவ செயற்திட்டத்தை றைனோ ஆரம்பிக்கவுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக,
மீள்சுழற்சிக்குட்படுத்தக்கூடிய கழிவுகளை சேகரிப்பது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் தென் மாகாணத்தில் காணப்படும் பாடசாலைகளில் கழிவுகளை பொறுப்பு வாய்ந்த வகையில்
வெளியேற்ற வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் கல்விசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2019 ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள சூழலுக்கு நட்பான வலுப் பிறப்பாக்கல் திட்டத்தினூடாக, வட மாகாணத்தைச் சேர்ந்த பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இனங்காணப்பட்ட இல்லங்களுக்கு சூரியக்
கலன்களால் வலுவூட்டப்பட்ட கூரைத் தீர்வுகள் வழங்கப்படும்.

புதுப்பிக்கத்தக்க வலுவை விஸ்தரித்து, அதனூடாக பின்தங்கிய பிரதேசதங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் மின் செலவை
கட்டுப்படுத்துவது தொடர்பில் இந்தத் திட்டத்தினூடாக கவனம் செலுத்தப்படும். நாட்டில் காபன் வெளியீட்டை குறைக்கும் நடவடிக்கையில் இந்தத் திட்டம் நேரடியாக பங்களிப்பை வழங்கும்.

இந்தத் திட்டங்களினூடாக உயிரியல் பரம்பல் மற்றும் வனஜீவராசி பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அனுகூலங்கள் ஆகியவற்றையும்
ஏற்படுத்துவது றைனோவின் இலக்காக அமைந ;துள்ளது. எனவே, பொது மக்களை தொடர்ச்சியாக ஈடுபடுத்துவதனூடாக, இந்த திட்டங்களின் பூர்த்தி நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்பதுடன், இந்தத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

1962 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது முதல், றைனோ கூரைத் தயாரிப்புகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து, தேசத்தின் உயர் தர முன்னணி கூரைத் தீர்வுகள் வழங்குநராக திகழ்கின்றது. உயர் தரம் வாய்ந்த
கூரைத் தகடுகள் மற்றும் அதனைச் சார்ந்த தயாரிப்புகளின் உற்பத்தியாளராக பல தசாப்த காலமாக றைனோ திகழ்வதுடன், இலங்கையின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் பெறுமதிமிக்க பங்களிப்பையும் வழங்கிய வண்ணமுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here