ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் கொம்பனி வீதி இரயில் நிலையத்தினை புதுப்பித்து பராமரிப்பதற்கான இலங்கை புகையிரத சேவையுடனான 16 வருடகால தனது அரச தனியார் பங்களிப்பை புதுப்பித்தது.


இது தொடர்பான ஒப்பந்தம் 29 ஜுலை 2019 ஆம் திகதி இலங்கை புகையிரத சேவையின் பொது முகாமையாளர், திரு.எம்.ஜே.டி.பெர்னாந்து மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சார்பார் திரு.கிஹான் குரே, பிரதி தலைவர் மற்றும் குழு நிதிப் பணிப்பாளர் மற்றுதி செயலாளர், செல்வி நதியா தம்பையா என்பர்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.

வர்த்தக செயற்பாடுகளின் மத்தியில் அமைந்துள்ள 1878 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதி ரயில் நிலையம் ஸ்லேவ் ஐலன்ட் புகையிரத நிலையம் எனவும் அழைக்கப்படுவதுடன் இது இலங்கையை பிரித்தானியர் ஆண்ட காலத்தில் இருந்த பழைய வீதியான ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தையில் அமைந்துள்ளது. சகாப்தத்தின் பொதுவான ஓட்டம் மற்றும் அழகான வளைவுகள் சிக்கலான மரவேலைகள், நவ நவீன உலோக நிறுவனல்கள் மற்றும் இரும்பு மற்றும் கல் கலவை ஆகியவை சுத்திகரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் உதாரணங்களாகக் கொண்டு, தொடர்ந்தும் விக்டோரியா கலையின் சின்னமாக இரயில் நிலையம் விளங்குகின்றது.

ஸ்லேவ் ஐலன்ட் எனும் பெயர் பிரித்தானிய காலத்தில் பெறப்பட்ட போதிலும் இதன் மூலம் போர்த்துகேயர்களும் ஒல்லாந்தர்களும் ஆட்சி செய்தபோது அனேகமான ஆபிரிக்கர்களை அடிமையாக இங்கே கொண்டுவந்ததனாலாகும்.

அப்போதிருந்து, ரயில் நிலையத்தை மையமாகக் கொண்டு ஹொட்டல்கள் மற்றும் உணவங்களை உள்ளடக்கி வர்த்தக பிரதேசமாக வளர்ச்சியடைந்தது. 19 ஆம் நூற்றாண்டின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் துணை நிறவனங்கள், சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி மற்றும் ஏனைய பழைய களஞ்சியசாலைகள் இதனையடுத்த வெளிப்புறத்தில் அமைந்திருந்தன. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைமையக வளாககும் கிளெனி வீதி எனும் சமாந்தர வீதிக்கு வந்ததுடன், இது 21 ஆம் நூற்றாண்டின் அபிவிருத்திக் கேந்திரமாக உருவெடுத்துள்ளது.

2002ம் ஆண்டில், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் காலனித்தவக் கட்டடக்கலையின் மதிப்பைப் பேணுவதற்காக கொம்பனி வீதி புகையிரத நிலையத்தை புதுப்பித்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. மிக அண்மையில் உள்ள சுற்றுப்புறத்தின் பிரதான சமூக அபிவிருத்தியாக ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த கருத்திட்டம் புகையிரத நிலையத்தின் அதன் அசல்சிறப்பிற்கு மீட்டெடுப்பை நோக்கமாகக் கொண்டதுடன் அதே நேரத்தில் ரயில் நிலையத்தினுள் லெவல் கிரொசிங், பாலம் மற்றும் பிற வசதிகளைப் புதுப்பித்து நவீனமயமாக்குவதன் மூலம் வயதான கட்டடக்கலைகளை சிறப்பிப்பதற்கு நவீன வசதிகளை செயற்படுத்தகின்றது. ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தம் இந்த ரயில் நிலையத்தை துப்பரவாகவும் பயன்படுத்தபவருக்கான நட்புறவான சூழலை உருவாக்கும் வண்ணம் ஜோன் கீல்ஸ் நிதியம் நாளாந்த பராமரிப்பை இந்த இரயில் நிலையத்தில் மேற்கொள்ளுகின்றது.

கருத்திட்டத்தின் கீழ் கட்டடங்கள் மற்றும் சேவைப் பிரதேசங்களின் அனைத்து திருத்தங்கள் மற்றும் வழமையான பராமரிப்புகள் உள்ளடங்களாக தோட்டத்தை பசுமையாக்கல் மற்றும் பராமரித்தல் இருபக்கத்திற்குமான மேலதிக கூரையுடன் மேம்பால மீள்கட்டமைப்புரூபவ் வாங்கில்களை புதுப்பித்தல் மற்றும் வர்ணம் தீட்டுதல், பிரதான வாயிலில் டிக்கெட் கவுண்டரில் உள்ள கூரையின் புதுப்பித்தல் என்பன மேற்கொள்ளப்படுவதுடன்ரூபவ் இதுரூபவ் ஜோன் கீல்ஸ் அமைப்பின் ஒத்துழைப்புடன் இலங்கை புகையிரத சேவையின் வழிகாட்டலின் கீழ் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தினால் அனுசரணை வழங்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றது. 2018Æ 2019ம் நிதியாண்டு காலத்தில் ஸ்லேவ் ஜலன்ட் புகையிரத நிலையக் கருத்திட்டத்தின் நன்மைகளை 703,514 பயணிகள் பெற்றுள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

அத்துடன்ரூபவ் 2013 ஆம் ஆண்டு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அலுவலகத் தொகுதி சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தைக்கு மீள்ளிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் குழுமம் கொம்பனிவீதி இரயில் நிலையத்திற்கு அருகாமையில் இலங்கையில் இவ்வாறான முதலாவது பிரதான மனை அபிவிருத்தியான சினமன் லைப்பை அமைத்தள்ளது.

“நகரத்தினுள் ஒர் நகரம்” எனும் இந்த தனித்தன்மையான கருத்திட்டம் கொழும்பு வாழ்க்கைத்தரத்திற்கு உகந்தவாறு 800 ஐந்து நட்சத்திர அறைகளைக் கொண்ட சினமன் ஹொட்டல்,ஷெப்பிங் மோல் கென்வென்சன் சென்டர், ஸ்டேர் ஆர் ஒப் 30 மாடி அலுவலக கோபுரம் பல்நோக்கு கொண்ட களியாட்ட இடங்கள், உணவகங்கள் மற்றும் 427 வீட்டு மனைகளை உள்ளடக்கியுள்ளது.

ஜேர்ன் கீல்ஸ் அமைப்பு என்பது ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு அமைப்பாகும். இது கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத்தர அபிவிருத்தி, சுற்றாடல் நிலைத்திருப்பு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் இடர் நிவாரணம் எனும் ஆறு முக்கிய பரப்புகளை இலக்காகக் கொண்டு “நாளைய நாட்டினை வளமூட்டல்” எனும் தொலைநோக்குடன் பல்வேறுபட்ட நிலையான முன்னெடுப்புகளை மேற்கொள்ளுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here