காதலில் நேர்மை மிக முக்கியம் என கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் அஜித்-சிவா கூட்டணியில் வெளியான ‘விவேகம்‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடித்த கடாரம் கொண்டான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அக்ஷராவின் நடிப்புக்கு பாசிடிவாக விமர்சனங்கள் வந்தன.
தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் ‘பிங்கர்டிப்’ என்ற வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்ஷரா ஹாசன்.
சமூக வலைதளங்களை வைத்து திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த தொடரை ஷிவாகர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
மொபைல் செயலிகளை மையமாக வைத்து படத்தின் கதை நகர்கிறது.
நாளை 21 ஆம் திகதியிலிருந்து 25-க்குள் ஒளிபரப்பாக இருக்கும் இத்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் அக்ஷரா ஹாசன் பேட்டியளித்தார்.
அவரிடம் காதலில் எது முக்கியம்? என்று கேட்டதற்கு காதலில் நேர்மை மிக முக்கியம். சமூகவலைதளங்கள் மற்றும் மொபைலிடம் இருந்து சற்று விலகி இருங்கள். சக மனிதர்களிடம் பேசி பழக வேண்டும் என்றும் கூறினார்.