உலகம்

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து ; 6 பேர் பலி, 52 பேர் காயம்

களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பஸ்விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி வீதியில் களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த கோர விபத்தில் 3ஆண்களும் 3பெண்களும் உயிரிழந்துள்ளனர்.


அத்துடன் காயமடைந்த 52 பேரில் 43 ஆண்களும் 8 பெண்களும் ஒரு குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்வண்டியுடன் மோதியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

Related Articles