உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ; 20 பேர் பலி, 24 பேர் காயம்

டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே நேற்று சனிக்கிழமை குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

21 வயதுடைய பற்றிக் க்ரூசியஸ் எனும் டல்லாஸ் பகுதியில் வசித்த இளைஞரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Hot Topics

Related Articles