உலகம்

பித்தப்பை கற்களை நீக்குவதற்கான நவீன சத்திர சிகிச்சை

பெரும்பாலானவர்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் சிறுநீரகத்தில் கல் குறித்து தெரியும். ஆனால் பித்தப்பையில் கல் உருவாகும். கால்ப்ளேடர் ஸ்டோன் எனப்படும் பித்தப்பை கற்கள் குறித்து எம்மில் பலருக்கு தெரிவதில்லை.


உங்களில் யாருக்கேனும் வலது பக்க வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டாலோ அல்லது சாப்பிட்டவுடன் அந்த பகுதியில் வலி ஏற்பட்டாலோ அல்லது அந்த வலி உங்களது தோள்பட்டைப்பகுதி வரை பரவினாலோ உங்களுடைய பித்தப்பையில் கற்கள் உண்டாகியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் போது சிலருக்கு வாந்தி ஏற்படும். சிலருக்கு வாந்தியுடன் காய்ச்சலும், மஞ்சள் காமாலையும் ஏற்படலாம்.

பித்தப்பையில் கற்கள் தோன்றுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.

பித்தப்பையில் கொலஸ்ட்ரால் குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் சேர தொடங்கினால், அதுவே பித்தப்பையில் கல்லாக மாறுவதற்கு சாத்தியக்கூறு உண்டு. டைபாய்ட் பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் பித்தப்பையில் கற்கள் உருவாகக்கூடும். தீவிர சிகிச்சைப் பிரிவில் 45 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, உணவு இயல்பான முறையில் உணவு குழாய் வழியாகச் செல்லாததன் காரணமாக, பித்தப் பையின் செயல்பாடு குறைகிறது. இதன் காரணமாகவும் பித்தப்பையில் கற்கள் தோன்றக் கூடும்.

இதற்கு உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனையும், சிகிச்சையையும் பெறவேண்டும். பித்தப்பையில் உள்ள கற்களை அகற்றாமல் புறக்கணித்தால், அந்தக் கற்கள் பித்தப்பையின் சுவற்றுடன் ஒட்டி பித்தப்பையை தடிமனாக்கி செயலிழக்க செய்துவிடும். இதன் காரணமாக அதிக அளவில் ஏப்பம் உருவாகும். எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். மேலும் சிலருக்கு பித்தப்பை கல் வளர்ந்து, பித்தப்பையின் குழாயை அடைப்பு ஏற்படுத்தி, பித்தப்பையை வீஙக்கமடையச் செய்துவிடும். பித்தப்பை குழாயில் கற்கள் உருவானால் மஞ்சல்காமாலை ஏற்படும்.

இரத்தப் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மூலமாக இதன் பாதிப்பைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு சத்திரசிகிச்சை மூலம், இது பித்தப்பைக் கற்களை அகற்றலாம். சிலருக்கு குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பித்தப்பையை அகற்ற வேண்டிய நிலையும் உருவாகும். இதனை லேப்ராஸ்கோபிக் மூலம் சத்திர சிகிச்சை செய்து அகற்றலாம்.

தற்போது லேப்ரோஸ்கோப்பியில் ஒரே ஒரு துளையிடப்பட்டு, அதன் வழியாக பித்தப்பையை அகற்றும் மருத்துவத் தொழில்நுட்பம் அறிமுகமாகியிருக்கிறது. பித்தப்பையை அகற்றிய பெண்மணிகள் மருத்துவர்களின் அறிவுரைப்படி தங்களது உணவு பழக்கவழக்கத்தை மாற்றியமைத்துக கொள்ளவேண்டும். வைத்தியர்கள் அறிவுறுத்தும் காலம் வரை அவர்களின் மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டும்.

Hot Topics

Related Articles