உலகம்

வசூலை வாரிக்குவித்த சந்தானத்தின் ‘A1’

சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘A1’ வார இறுதியில் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது.


முன்னணி கொமடி கதாநாயனாக வலம் வரும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் தயாரான திரைப்படம் ‘A1’. இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை தாரா அலிஷா பெர்ரி நடித்திருந்தார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜோன்சன் இயக்கியிருந்தார்.

பல தடைகளை கடந்து கடந்த வாரம் வெளியானது. வாய் விட்டு சிரிக்கும்படியான பல காட்சிகள் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் திரைக்கதை அமைப்பும் இருந்ததால், படத்திற்கு ஆதரவு பெருகியது.

சென்னையில் மட்டும் ‘த லயன் கிங்’ என்ற படத்திற்கு நிகரான வசூலை சந்தானத்தின் A1 பெற்றது என்றும், தமிழகம் முழுவதும் பட மாளிகையிலிருந்து மட்டும் A1 இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது என்றும் திரையுலக வணிக நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் நடிகர் சந்தானமும். படக்குழுவினரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.இதனிடையே சந்தானத்தின் இந்த சந்தை மதிப்பை முன்வைத்து அவர் நடிப்பில் தயாராகி, கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ மற்றும் ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் ஒன்று விரைவில் வெளியாகக் கூடும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles