உலகம்

நாமல் சிறையில் இருந்தபோது ஏற்பட்ட உறவு : அரசியல் கைதியாக இருந்தவருக்கு கொடுத்த பரிசு!

நாமல் ராஜக்ஷ தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சவரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றினை அமைத்துக்கொடுத்து அன்புப் பரிசை வழங்கியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.


குறித்த நிகழ்வு இன்று(30) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. அரசியல் கைதியான சவரிமுத்து லோகநாதனின் குடும்ப நிலையை சிறைச்சாலைக்குள் வைத்து அறிந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அரசியல் கைதியின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை நிர்மானித்த இன்று(30) அவர்களிடம் கையளித்தார்.


குறித்த அரசியல் கைதி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.


அந்த வகையில் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்ததோடு, கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு சென்று சந்தையின் நிலைமைகளையும் பார்வையிட்டார்.


மேலும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டு இருப்பதனை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில், நாங்கள் செய்தது அபிவிருத்தி. இவர்கள் கிராமத்தை அழிவுக்குள் கொண்டு செல்கின்றனர் என கிளிநாச்சியில் நாமல் ராஜாபக்ச இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னர் ஊடகவியலாளர் வடக்கின் வசந்தத்திற்கும், கம்பெரலியவிற்கும் என்ன வேறுபாடு என வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 

 

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் செல்வாநகரில் விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட விளையாட்டு மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டார்.


இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மெற்கொண்ட அவர் செல்வாநகரில் இயற்கை விவசாயத்தில் சிறப்பாக ஈடுபட்டு தேரிய விருதுகளை பெற்றுக்கொண்ட எஸ்.ராஜகோபால் என்பவரின் விவசாய செய்கையை பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களுடன் கலந்துரையாடினார்.


தொடர்ந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானம் தொடர்பில் நேரடியாக பார்வையிட்டனர். குறித்த விளையாட்டு மைதானம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் அவர் கவனம் எடுப்பதாக தெரிவித்தனர்.

Hot Topics

Related Articles