போதையில் இருந்த இளைஞர் ஒருவர், தன்னைத் தீண்டிய பாம்பை பிடித்து கடித்து துண்டு துண்டாக்கிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு; உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் உள்ள அஸ்ரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். நேற்று இவர் மது போதையில் தனது வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த பாம்பு ஒன்று ராஜ்குமாரை கொத்தியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அவர், தன்னைத் தீண்டிய பாம்பை கையால் பிடித்து, அதை துண்டு துண்டாகக் கடித்து வீசியுள்ளார்.

அத்துடன், பாம்பு கொத்தியதில் அதன் விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை,  குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மயக்க நிலையில், மிகவும் கவலைக்கிடமாக உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here