உலகம்

தேசிய டிஜிட்டல் திட்ட அங்குரார்ப்பணம் : 18 பிராந்திய நிகழ்ச்சிகளை நடத்திய SLT

“SMART Sri Lanka” தொனிப்பொருளின் கீழ் தேசிய டிஜிட்டல் திட்ட அங்கரார்ப்பணத்திற்கு இணையாக நாட்டின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தீர்வு வழங்குநரான ஸ்ரீலங்கா டெலிகொம் பதினெட்டு பிராந்திய நிகழ்ச்சிகளை அண்மையில் நடத்தியது.


பிராந்திய அரச அதிகாரிகள், வர்த்தக வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சமூகத் தலைவர்கள் உட்பட 4500க்கும் அதிகமானோரின் பங்கேற்புடன் கம்பஹா, கலகெடிஹேன, வாத்துவ, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, அநுராதபுரம், பொலன்னறுவை, சிலாபம், குருநாகல், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இந்த பிராந்திய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழிப்புணர்வு விளக்கக்காட்சிகள், கலந்துரையாடல் மன்றங்கள் மற்றும் நேரடி செயல் விளக்கங்களைக் கொண்டதாக இந்த பிராந்திய அமர்வுகள் அமைந்தன. Sri Lanka Telecom Services, SLT Digital Info Services , Fentons Limited (Pvt) Ltd , Epic Lanka (Pvt) Ltd, SALA Enterprises, Finco Technologies (Pvt) Ltd மற்றும் e-solutions Lanka (Pvt) Ltd போன்ற SLT வர்த்தகக் கூட்டாண்மை நிறுவனங்களும் செயல் விளக்கங்களை எளிதாக்குவதற்கு இணைந்தன.

Hot Topics

Related Articles