உலகம்

குப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டுக்களை உறுதியாக மறுக்கும் Hayleys Free Zone

இலங்கைக்கு குப்பைகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் தம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முற்றிலும் நிராகரித்த Hayleys Free Zone Limited, இது தொடர்பான அறிக்கையொன்றையும் ஊடகங்களுக்கு வெளியிட்டது.


Hayleys Free Zone yard வளாகத்தில் தற்போது சேமிக்கப்பட்டுள்ள 130 கொள்கலன் அளவிலான உபயோகப்படுத்தப்பட்ட மெத்தைகள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகிவரும் பாதகமான பரப்புரைகள் தொடர்பில் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளதுடன் இந்த மெத்தைகள் Ceylon Metal Processing Corporation (Pvt) Limited இனால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களே இந்த சரக்குகளின் உண்மையான உரிமையாளர்கள் என்றும் தெரிவித்தது.

Hayleys Free Zone என்பது Commercial Hub Regulation Act No.1 of 2013 இன் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சட்டபூர்வமான ஸ்தாபனம் என்பதுடன் உலகம் பூராகவும் உள்ள இலவச வலயங்களில் வழங்கப்படுவது போன்றதான, மீள் ஏற்றுமதிக்கான பெறுமதி சேர் சேவைகள் மற்றும் களஞ்சியப்படுத்தல் வசதியை வழங்குதலை பிரதான நோக்கமாகக் கொண்ட, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு லொஜிஸ்டிக் சேவைகளைகளை வழங்கும் கரை கடந்த பிரதேசமாக செயற்படுகின்றது.

Hayleys Free Zone ஆனது Ceylon Metal Processing Corporation (Pvt) Ltd நிறுவனத்தினால் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள மெத்தைகளை பதப்படுத்தி, மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட freight forwarder ETL Colombo (Pvt) Ltd உடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டது.
குறித்த சரக்கானது Hayleys Free Zone இற்கு freight forwarder ETL Colombo (Pvt) Ltd இனால் ஒப்படைக்கப்பட்டதுடன், இது Free Zone வளாகத்திற்கு வந்து சேரும் சரக்கானது Free Zone நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட வேண்டுமென்ற மையத்தின் ஒழுங்கு விதிகளின் பிரகாரம் இடம்பெற்றது.

சரக்கைப்பெறுபவர் Hayleys Free Zone Limited என CUSDEC தெரிவிக்கின்ற போதிலும் , அந்த சரக்கின் மீது எந்த சட்டரீதியான உரிமையும் இல்லை என்பதுடன் வணிக விலைப்பட்டியலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளமையைப் போல பாவிக்கப்பட்ட மெத்தைகளின் உரிமையாளரோ அல்லது இறக்குமதியாளோரோ தான் இல்லை என்பதனையும் Hayleys Free Zone Limited குறிப்பிடுகின்றது.

தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள 130 கொள்கலன் சரக்கானது அபாயகரமற்றது என குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே Hayleys Free Zone yard இற்கு ஏற்கப்பட்டன என நிறுவனம் குறிப்பிடுகின்றது.

மொத்தமான 130 கொள்கலன் பாவிக்கப்பட்ட மெத்தைகளில் 29 கொள்கலன்களை இதுவரை Hayleys Free Zone பதப்படுத்தி மீள் ஏற்றுமதி செய்துள்ளது. பதப்படுத்தலைப் பொறுத்தவரையில், Hayleys Free Zone ஆனது மெத்தையை பிரித்தல் மற்றும் துணி, பஞ்சு, ஒட்டுக் கம்பளம் மற்றும் உருக்கினை வேறுபடுத்தி இவை ஒவ்வொன்றையும் Ceylon Metals இன் தேவைக்கேற்ப வேறு வேறு கொள்கலன்களின் பொதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் சேவையை வழங்கி வருகின்றது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மெத்தைகளை தனது சொந்த செலவில் பதப்படுத்தி விரைவாக மீள் ஏற்றுமதி செய்யும் முடிவை எடுத்துள்ளதாக Hayleys Free Zone தெரிவித்துள்ளது.

தற்போது துறைமுகத்தில் உள்ள 102 கொள்கலன்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை. கொழும்பு துறைமுகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள 102 கொள்கலன்கள் தொடர்பிலான மேலதிக குற்றச்சாட்டுக்களை மறுக்கும் Hayleys Free Zone Limited, குறிப்பிட்ட 102 கொள்கலன்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளது. Hayleys Free Zone Limited இன் பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”

Hayleys Free Zone கொழும்பு துறைமுகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள 102 கொள்கலன்களுடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை. மேலும் குறிப்பிட்ட கொள்கலன்களின் இறக்குமதியாளரோ அல்லது சரக்கை ஏற்றுக்கொள்பவரோ அல்லது லொஜிஸ்டிக் சேவை வழங்குனரோ இல்லை” என்றார்.

இதேவேளை Hayleys PLC இன் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,” நெறிமுறை மற்றும் சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில்,

Hayleys எங்கள் தாய்நாட்டிற்கு குப்பைகளை இறக்குமதி செய்வது போன்ற எந்த விதத்திலும் நியாயமற்ற செயலிலும் ஈடுபடாது" எனக் குறிப்பிட்டார். Hayleys Free Zone இதுவரை கிடைத்த ஒத்துழைப்புக்கு முதலீட்டுச் சபைக்கு (BOI) இற்கு நன்றி தெரிவிப்பதோடு, Hayleys Free Zone yard இல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இந்த உபயோகப்படுத்தப்பட்ட மெத்தைகளை துரிதமாக பதப்படுத்தலை எளிதாக்க முதலீட்டுச் சபையுடன் இணைந்து செயற்படும்.

Hayleys Free Zone yard இல் உள்ள மெத்தைகள் சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டு மத்திய சூற்றாடல் அதிகாரசபையுடன் நெருக்கமாக செயற்படும் என்பதனையும் நிறுவனம் குறிப்பிடுகின்றது.

140 வருடங்கள் நீளும் வரலாற்றைக் கொண்டுள்ள Hayleys PLC இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 3.53% பங்களிப்பு செய்வதுடன், 2017 ஆம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எட்டியதன் மூலம், இந்த மைல்கல்லை எட்டிய முதல் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பதிவாகியிருந்தது.

இக்குழுமமானது 2018/19 நிதியாண்டியில் 220 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்திருந்தது. இக்குழுமானது இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக தனது பெயரை பேணி வந்ததுள்ளதுடன், LMD இன் முதல் 100 நிறுவனங்களில் முதலிடத்தை பல வருடங்களாக தக்க வைத்துள்ளது. பேண்தகைமை மற்றும் நெறிமுறையான நிறுவனமாக இருப்பதற்கான தனது உறுதிப்பாட்டின் காரணமான, இந்நிறுவனம் 2016 ஆம் ஆண்டு மதிப்புமிக்க “Grand Slam” விருதினை, தொடர்ச்சியான Best Corporate Citizen விருதினை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பெற்றதன் மூலம் தனதாக்கியது.

Hot Topics

Related Articles