ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீட்டு விழா கடந்த (02.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை, La Villa Cesar, 21 bis, Rue de Villeneuve, 94150 Rungis, France இலும் கடந்த 14.07.2019 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரான்ஸில் இடம்பெற்ற அணிகலன் நூல் வெளியீட்டு விழாவில் திரு. பாலசுப்பிரமணியம் பிரபாகரன் வரவேற்புரை மற்றும் தலைமையுரை ஆகியவற்றை வழங்கியதுடன், நூல் ஆய்வுரையை ஆசிரியர் திரு. சிவசுப்பிரமணியம் சேத்திரபாலன் ஆற்றினார். அணிகலன் நூல் முதற் பிரதியை திரு. தம்பிராசா பரமானந்தம் பெற்றுக் கொண்டதுடன், ஆசிரியர் திரு. தம்பிராசா பரமேஸ்வரன் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்ட பின்னர் வாழ்த்துரைகள் இடம்பெற்றன. திரு. தம்பிராசா பரமானந்தம், திருமதி. செல்வராணி முகுந்தராஜா, திரு. ஸ் ரீபன் ஜெயசீலன், திரு. தங்கராஜா கேசானந்தன், திரு. ரீ. தயாபரன், திரு. செல்லத்துரை முகுந்தராஜா, திருமதி. செல்வேஸ்வரன் நேசகுமாரி மற்றும் திரு. துரைராஜா ஆகியோர் வழங்கினார்கள்.
ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், 2009 ஆண்டு பிற்பகுதியில் வீரகேசரி ஊடாக எழுத்துத்துறையில் கால்பதித்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை, பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பேராசிரியர் பி. புஷ்பரட்ணம் மற்றும் தமிழ் அறிஞர்கள் பலரின் காத்திரமான வழிகாட்டல்கள் ஊடாக கலைக்கேசரி மாதாந்த சஞ்சிகை மூலம் தமிழ் அச்சு ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை அவர் பிடித்தார்.
உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய பெட்டகம், நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில், The Discover Jaffna ஆகிய நூல்களின் வரிசையில் நான்காவது நூலாக அணிகலன் இடம்பெறுகிறது.
இலங்கையின் புகழ்பூத்த ஆன்மீக சொற்பொழிவாளர் அமரர் வசந்தா வைத்தியநாதன் அம்மா வாழ்ந்த காலத்தில், நூலாசிரியருக்கு வழங்கிய வழிகாட்டல்களையும் தகவல்களையும் மிகச் சரியாக கையாண்டு அணிகலன் நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீட்டு விழா கடந்த (14.07.2019) ஞாயிற்றுக்கிழமை காலை, Fox Resorts Jaffna, 257, KKS வீதி கொக்குவில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
சிரேஷ்ட பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் (தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம்) தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, சிவஶ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் (தலைவர், இலங்கை இந்துக் குருமார் அமைப்பு) ஆசியுரை வழங்கினார்.
திரு. மயில்வாகனம் லினாஷ்குமார் (அதிபர், யாழ். குடமியன் அ.த.க. பாடசாலை) வரவேற்புரை ஆற்றினார். திரு. எஸ். லலீசன் (பிரதி அதிபர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மற்றும் தலைவர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்) வாழ்த்துரை வழங்கினார். சிரேஷ்ட பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைமையுரை மற்றும் நூல் அறிமுக உரையை நிகழ்த்தினார். இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய துணைத்தூதுவர் திரு. எஸ். பாலச்சந்திரன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தி ரு. தி. தயாளன் (நிர்வாக இயக்குனர், T-Link) வெளியீட்டு உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து, நூல் வெளியீடு இடம்பெற்றது.
அணிகலன் நூல் முதற்பிரதியை வாழ்நாள் சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (தகுதிவாய்ந்த அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) வழங்க, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பெற்றுக் கொண்டார். சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்ட பின்னர் உரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (முன்னாள் தமிழ்த்துறை தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைகழகம்) நூல் ஆய்வுரையை வழங்கினார். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வாழ்நாள் சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (தகுதிவாய்ந்த அதிகாரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பிரதம விருந்தினர் உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் (முன்னாள் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்தினர் உரையை ஆற்றினார். நிறைவாக ஏற்புரையும் நன்றியுரையும் இடம்பெற்றது.
தமிழர் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறும் கலை, கலாசார, பண்பாட்டு விடயங்களுடன் கூடிய தமிழர் பாரம்பரிய நகைகள், அணிகலன்கள், ஆபரணங்கள் தொடர்பிலான கிட்டத்தட்ட 20 கட்டுரைகளை உள்ளடக்கி அணிகலன் நூல் அமைந்துள்ளது.
காலத்தின் தேவை கருதி வெளியிடப்படும் அணிகலன் நூல் வெளியீட்டு விழாவில், தமிழர் வரலாறு, பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்வியலில் ஆர்வம் கொண்ட யாழ்ப்பாண மக்கள் கலந்து கொண்டனர்.