உலகம்

இலங்கையில் Network Function Virtualization (NFV)ஐ செயற்படுத்திய HUTCH

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் தொலைத்தொடர்பாடல் வழங்குனரான HUTCH, வல்பொலவில் அமைந்துள்ள தனது உயர் தொழில்நுட்ப மையத்தை முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டதாக மேம்படுத்தியதன் மூலம் சந்தையில் தனக்கான இடத்தை வலுப்படுத்தியுள்ளது.

அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதிசெய்துகொண்டு, HUTCH,அண்மையில் மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது உயர்ந்த 4G வலையமைப்பை ஸ்தாபித்ததுடன், தற்போது நாடு பூராகவும் அதனை செயற்படுத்தி வருகின்றது.

இந்தச் செயன்முறையின் ஊடாக, HUTCH முதலாவது முற்று முழுதான NFV (Network Function Virtualization)ஐ அடிப்படையாகக் கொண்ட மூல வலையமைப்பை செயற்படுத்தியுள்ளதுடன், இத் தொழில்நுட்பமானது இயக்குனர்கள் தமது பாரம்பரிய வன்பொருள் அடிப்படையிலான வலையமைப்பில் இருந்து வெளியேறி தொலைத்தொடர்பாடல் சேவைகளுக்கு பொதுவான தகவல் தொழில்நுட்ப சேர்வர்களை நோக்கி நகர அனுமதிக்கும்.

இந்த செயற்படுத்தல் மூலம் தொலைத் தொடர்பு பயன்பாடுகளுக்கென வடிவமைக்கப்பட்ட அனைத்து சிறப்பு அமைப்புகளும் எந்தவொரு நியமமான தகவல் தொடர்பாடல் சேர்வரிலும் இயங்கும், இது நெகிழ்வுத்தன்மை, விரைவான செயற்படுத்தல் மற்றும் மேம்படுத்துவதில் குறைந்த மூலதன செலவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றது,
மேலும் அவை விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத் துறையில் அத்தியாவசிய அம்சங்களாகும்.


முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு ஆகிய அறவிடல் அமைப்புகள் ஒரே மேடையில் இயங்கக்கூடிய மிகவும் மேம்பட்ட இணைந்த அறவிடல் அமைப்பை NFV (Network Function Virtualization)ஐ செயற்படுத்தவுள்ளது. இது இந்தவொரு தனிநபர் அல்லது நிறுவன பயனர் தமது தேவைக்கேற்ற தனித்துவமான பக்கேஜை வரையறுக்க நெகிழ்வுத்தன்மையை அளிக்கின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த HUTCH Sri Lanka இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா, உயர் மேம்பாடடைந்த மூல வலையமைப்பு மற்ரும் இணைந்த அறவிடல் அமைப்பை இலங்கையில் செயற்படுத்துகின்றமையானது, HUTCHஅதன் சந்தாதாரர்களுக்கு சிறந்த மற்றும் மேம்பட்ட சேவைகளை வழங்குவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.

முழு நாட்டுக்கும் கட்டுப்படியாகும் விலையில் புரோட்பேண்ட் சேவைகளை வழங்க உதவும் நாடுபூராவுமான 4G வலையமைப்பை நிறுவும் செயற்பாடும் இதனோடு முன்னெடுக்கப்படுகின்றது.

HUTCHஇன் கீழான Etisalat 2G/3G இன் கையகப்படுத்தல் மற்ரும் ஒருங்கிணைப்பானது இறுதியாக போட்டித்தன்மை மிக்க 2G மற்றும் 3G சேவைகளை நாடுபூராகவும் முக்கிய போட்டியாளர்களுக்கு இணையாக வழங்கும். எனவே HUTCH தற்போது போட்டித்தன்மை மிக்க மாற்றீடான மொபைல் சேவையை சந்தைக்கு வழங்கமுடியுமாக இருப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்”, என்றார்.

Hot Topics

Related Articles