உலகம்

சீனாவில் பாரிய சுற்றுலா பயண முன்னெடுப்பினை இலங்கை அறிமுகப்படுத்துகிறது !

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் அண்மையில் சீனாவில் பாரிய கவர்ச்சிகரமான முன்னெடுப்பினை ஆரம்பித்துள்ளது.

சீன பார்வையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் மிகவும் பிரபலமான பயண முகவர்கள் மற்றும் சீன சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பீஜிங்கில் கூடினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசி மற்றும் கத்தோலிக்க மத விவகாரத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வரும் போது அவர்களுக்கான நுழைவு அனுமதியினை அகற்றுவது குறித்து ஆராயப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் சீன சுற்றுலா பயணிகளை மீண்டும் வரவேற்க இலங்கை தயராகவுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த கண்காட்சியினை அடுத்து இலங்கை சுற்றுலாத்துறை விசேட ஊடக சந்திப்பொன்றை சீன மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்காக சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள சீன உலக விருந்தகத்தில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பில் 60 ஊடகவியலாளர்கள் மற்றும் விமான சேவைகள், பயண முகவர்கள் உட்பட 40 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இவர்களில் சீன CCTM பீப்பிள்ஸ் டெயிலி, குளோபல் ரைம்ஸ், சீன வானொலி, சீன ஏயார், சீன ஈஸ்டேன் விமான சேவை, இலங்கையின் எயர் லங்கா, மற்றும் சீன தென் விமான சேவை ஆகியனவற்றின் பிரதிநிதிகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்,

சீன சுற்றுலா சந்தை இலங்கையின் முக்கிய சந்தையாக திகழ்வதனால், சீன சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அகற்றுவதில் ஆர்வத்துடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

பீஜிங் கலாச்சார மற்றும் சுற்றுலா நிர்வாக பீஜிங் சர்வதேச சுற்றுலா எக்ஸ்போ 2019 என்ற நிகழ்வு மிகவும் பிரபலமான செல்வாக்கு மிக்க நிகழ்வுகளின் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசி மற்றும் கத்தோலிக்க மத விவகாரத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொண்டார்.

வருடா வருடம் இடம்பெறும் இந்த நிகழ்வில் உலகளாவிய சுற்றுலா வளங்கள் மற்றும் தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் வர்த்தக மேடையாக திகழ்கின்றது. சீனாவில் நடைபெறும் பாரிய சர்வதேச பயண கண்காட்சியான “BITE 2019” கண்காட்சி விழா இந்த முறை 16 ஆவது வருடமாக கடந்த ஜூன் மாதம் 18 முதல் 20 ஆம் திகதிவரை இடம்பெற்றது.


சுற்றுலா முதலீடு மற்றும் நிதி, சுற்றுலா ஆதன குடிமனை, சுற்றுலா பொருட்கள், விசேட நகரங்கள், சுற்றுலாத்துறை, புலனாய்வு சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, வெளிக்கள சுற்றுலா, முகாமிடல் சுற்றுலா மற்றும் பல வகையான சுற்றுலா திட்டங்களை இது தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கையின் இரண்டாம் சுற்றுலா சந்தையாக சீனா பரிணமிக்கின்றது. கடந்த வருடத்தில் சீனாவை சேர்ந்த 265,965 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். சீனாவில் 150 மில்லியன் சுற்றுலா பயணிகள் உள்ளனர். வருடா வருடம் இந்த தொகை 14 வீத அதிகரிப்பைக் காட்டுகின்றது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது வருகை தந்திருந்தோர், இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கேள்வி எழுப்பினர்.


அமைச்சர் ஜோன் அமரதுங்க, சீனாவில் உள்ள இலங்கை தூதுவர் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கிஷு கோமஸ் ஆகியோர் தற்போதைய நிலைமை குறித்து விளக்கியதுடன், தற்போது இலங்கை பயணிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பை கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

கண்காட்சி மற்றும் செய்தியாளர் பங்கேற்பிற்கு மேலாக அமைச்சர் ஜோன் அமரதுங்க சீன, குன்மிங்கில் உள்ள சுற்றுலா கல்லூரியான யுனானுக்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டார். சீனாவிற்கான விஜயத்தின் போது 17 ஆம் திகதி ஜூன் மாதம் 2019 அன்று குன்மிங்கில் உள்ள சுற்றுலா கல்லூரியான யுனானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.


அமைச்சரின் குழுவில், சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசி மற்றும் கத்தோலிக்க மத விவகாரத்துறை அமைச்சர்  ஜோன் அமரதுங்க, அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் பீலிக்ஸ் ரொட்ரிகோ, அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஆர்.ஏ.பீ. ஆரயரட்ன, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் உதவி இயக்குனர் திரு. சிந்தக்க லியனாராட்சி ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

சீனா சார்பாக யுனான் சுற்றுலா கல்லூரியின் தலைவர் திரு. சாங் ஜிங்லொங், யுனான் மாகாண கலாச்சார மற்றும் சுற்றுலா திணைக்களத்தின் தலைவர் திரு.ஹி லீகூய், சர்வதேச ஒத்துழைப்பு இயக்குனர் ஷென் வீ, சர்வதேச ஒத்துழைப்பு இயக்குனர் திருமதி லை ஜியாக்சின், சுற்றுலா யுனான் கல்லூரியின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் இயக்குனர் மற்றும் செயலக பிரதி இயக்குனர் திரு. பான் குவாங்யூ ஆகியோரும் பங்கு கொண்டனர்.

இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையேயான உறவினை வலுப்படுத்தலாகும். அமைச்சரின் யுனான் சுற்றுலா கல்லூரியின் விஜயத்தின் போது கல்லூரியின் அதிகாரிகளுடன் விரிவாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர, இலங்கை சுற்றுலாவினை சீன குமிங்கில் எந்தவகையில் அபிவிருத்தி செய்வது என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

சுற்றுலாத்துறை யுனான் கல்லூரியின் விஜயம் காரணமாக இலங்கையில் உள்ள சீன மொழி வழிகாட்டிகளுக்கு விசேட பயிற்சியில் பங்குகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சைனோ ஏசியன் சுற்றுலா தரப்பினருக்கான கல்வி மற்றும் பயிற்சி தளம் என அழைக்கப்படும் பயிற்சிகள் எதிர்வரும் ஒக்டோபர் 13 முதல் நொவம்பர் 2, 2019 வரை நடத்தப்படும். இது தவிர பீஜிங் சர்வதேச சுற்றுலா எக்ஸ்போ (BITE) 2019 நிகழ்வின் போது இலங்கை சுற்றுலாவிற்கு “சிறந்த ஏற்பாட்டாளர்” விருது கிடைக்கப்பெற்றமை அதிஷ்டவசமானதாகும்

Hot Topics

Related Articles