உலகம்

N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள்-அறிமுகம்

தூய வெள்ளை இயற்கை தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக நம்பிக்கையை வென்ற நாமமான N-joy தனது தேங்காய் எண்ணெய் தெரிவுகளை அண்மையில் மீள் அறிமுகம் செய்திருந்தது.


இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட ஒரே தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் தயாரிப்பாக திகழும் N-joy முழுமையாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.

“அவளின் தெரிவு” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மீள் அறிமுக நிகழ்வில், வர்த்தக நாம தூதுவரான புகழ்பெற்ற நடிகையான பூஜா உமாசங்கர் கலந்து கொண்டார்.

ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சுரேன் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில்,
“சந்தையில் பல காலமாக காணப்பட்ட நிலையில், தயாரிப்பு முதல் பொதியிடல் வரையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த நாம் விரும்பினோம். தேங்காய் மற்றும் தேங்காய் அடிப்படையிலான தயாரிப்புகளில் எமது ஈடுபாடு மற்றும் நிபுணத்துவம் சுமார் 150 வருட காலம் பழமையானது.

அவ்வாறான நிலையில், நுகர்வோருக்கு உயர் தரமான தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான முழு ஆற்றலையும் நாம் கொண்டுள்ளோம்.” என்றார்.

தூய தேங்காய் எண்ணெய் உற்பத்தியை நிறுவனம் பாரம்பரியமான முறையில் உற்பத்தி செய்கின்றது. N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் என்பது 2001 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், நம்பிக்கையை வென்ற தயாரிப்பாக திகழ்கின்றது. N-joy இன் பிரத்தியேகமான உள்ளம்சங்களாக, இயற்கையான முறையில் எவ்விதமான இரசாயன பதார்த்தங்களும் சேர்க்கப்படாத வகையில் அல்லது உயர் வெப்பநிலைக்கு வெளிப்படுத்தாத வகையில் அமைந்துள்ளது. இது சுத்திகரிக்கப்படாத (refined), வெளுக்கப்படாத அல்லது நறுமணமூட்டப்படாததாகும் (RBD).

உலகளாவிய ரீதியில் தேங்காய் “ஆரோக்கியம்” என்பதன் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ள நிலையில், நுகர்வோருக்கு இந்த தயாரிப்பினூடாக தூயரூபவ் மாற்றியமைக்கப்படாத தேங்காய் நலனை பெற்றுக்கொள்ள முடியும். N-joy தேங்காய் எண்ணெய் கொலஸ்ரோல் சேர்மானமற்றதுடன் செயற்கை கொழுப்புகளை கொண்டிருப்பதில்லை. N-joy தேங்காய் எண்ணெய் SLS32 தரச்சான்றை கொண்டுள்ளதுடன் உணவு பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புக்காக நிறுவனம் ISO 22000 சான்றையும் பெற்றுள்ளது. மேலும் நிறுவனத்தின் நீண்ட கால தயாரிப்பான வறுத்த தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கு தெற்காசிய சந்தையில் பெருமளவு வரவேற்பு காணப்படுகின்றது. பெருமளவில் இது உயர் தர கூந்தல் எண்ணெய் வகையாக பயன்படுத்தப்படுகின்றது.

ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் தர உறுதிப்படுத்தல் முகாமையாளர் சாலிய சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது தயாரிப்புகளை நாம் நவீன வசதிகளைக் கொண்ட உற்பத்திப் பகுதியில், உயர் தர நிர்ணயங்களுக்கமையவும், தயாரிப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எவ்விதமான இரசாயன பதார்த்தங்களின் சேர்மானமுமின்றி உற்பத்தி செய்கின்றோம். உயர் தரம் வாய்ந்த வெள்ளை தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனம் முன்னோடியாக அமைந்துள்ளது. எவ்விதமான இரசாயன பதார்த்தங்களும் சேர்க்கப்படாத உயர் தரம் வாய்ந்த கொப்பரா தயாரிப்புகளை பெற்றுக் கொள்ளும் வகையில் விநியோக தொடருடன் நெருக்கமாக செயலாற்றி வருவதனூடாக இதை பேண முடிகின்றது.” என்றார்.

நிறுவனத்தின் உற்பத்தி ஆலை பன்னல பகுதியில் அமைந்துள்ளது. இது BRC (‘British Retail Consortium’) இன் ‘AA’ சான்றிதழை கொண்டுள்ளது. இதனூடாக வெர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் இதர தேங்காய் உற்பத்திகள் ஏற்றுமதி சந்தைக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்வரும் காலப்பகுதியில் புதிய தயாரிப்பு தெரிவுகளை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதுடன்ரூபவ் இதில் வெர்ஜின் தேங்காய் எண்ணெய் மற்றும் போஷாக்கு நிறைந்த தயாரிப்புகள் போன்றன அடங்கியுள்ளன.

Hot Topics

Related Articles