உலகம்

இலங்கையின் முதலாவது கார்கள் பயணமில்லாத தினம் அனுஷ்டிப்பு

நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு நகர சபை இணைந்து, கொழும்பின் முதலாவது கார்கள் இல்லாத தினத்தை அனுஷ்டிக்க முன்வந்துள்ளன.


அதன் பிரகாரம் ‘CarFreeCMB’ எனும் பெயரில் ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வு, ஜுலை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கொழும்பின் இன்டிபென்டன்ஸ் அவினியு முதல் கிறீன் பாத் வரையான பகுதி கார்கள் பாவனையற்ற பகுதியாக அமைந்திருக்கும்.

இப்பகுதியில் பயணிப்போரை நடை, சைக்கள், ஸ்கேட்போட் போன்ற மோட்டார் ஒன்றினால் வலுவூட்டப்படாத ஏதேனும் முறையில் பயணிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பொது மக்களுக்கு தமது வீதிகளில் சுதந்திரமாக, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழுமாறும் அழைக்கின்றது. ஆரோக்கியமான மற்றும் நிலைபேறான நகர வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன் மோட்டார் வாகனங்களில் தங்கியிருப்பதை தவிர்ப்பதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.


பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளுக்காக பின்வரும் பாதைகள் இக்காலப்பகுதியில் திறந்திருக்கும். கிறீன் பாத் முதல் பொது நூலக சுற்றுவட்டம் கலாநிதி. சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர மாவத்தை மற்றும் இன்டிபென்டன்ஸ் அவினியு ஒரு பகுதி. இப்பகுதியால் பயணம் மேற்கொள்ளும் மோட்டார் வாகன சாரதிகளை மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் பதாதைகள் தர்மபால மாவத்தை, ஹோர்டன் பிளேஸ், சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை மற்றும் பௌத்தாலோக மாவத்தை ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பேருந்துகள் வழமை போன்று பயணிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


CarFreeCMB என்பது இலவச நிகழ்வாகும், அனைவருக்கும் திறந்த நிகழ்வாகும். இதில் பங்கேற்போர் குட் மார்க்கெட் அடங்கலாக இந்த வீதியில் காணப்படும் வியாபாரங்களுக்கு தமது ஆதரவை வழங்க முடியும், நேரடியாக இடம்பெறும் இசையை கேட்டு மகிழலாம். கிறீன் பாத் பகுதியில் காணப்படும் கலை ஆக்கங்களை பார்வையிடவும் முடியும்.

பல்கலைக்கழக கலை மாணவர்களுக்கு கலை அமர்வொன்றை பிள்ளைகளுக்காக முன்னெடுப்பதற்கான வசதிகளை UNICEF ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதுடன் பிள்ளைகளுக்கு தமது சித்திரங்களை வரைவதற்கு அவசியமான பொருட்கள் விநியோகிக்கப்படும். உடற்பயிற்சி, யோகா மற்றும் இதர உடற் தகைமை அமர்வுகள் போன்றனவும் இதன் போது முன்னெடுக்கப்படும். திறந்த வீதி நிகழ்வில் பிளாஸ்ரிக் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சேதன தயாரிப்புகள் போன்றன மாத்திரமே விநியோகிக்கப்படும். இதனூடாக நிகழ்வின் நிலைபேறாண்மை தொனிப் பொருளை பேண திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நிகழ்வுடன் மாநகர சபையினால், வீதிகளில் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான முதலாவது படிமுறையை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

“தெரிவு செய்யப்பட்ட வீதிகளிலிருந்து போக்குவரத்தை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை ஞாயிற்றுக்கிழமை காலையில் நாம் முன்னெடுப்போம். இதனூடாக, நகரின் மக்களுக்கு இந்த வீதிகளை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதியளிக்கவுள்ளோம். அனைவரையும் இந்த ஞாயிறு காலைப் பொழுதை அனுபவித்து மகிழ வருகை தருமாறு அழைக்கின்றேன். பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் செயற்பாடுகள் காணப்படுவதுடன், உணவு மற்றும் பானங்கள் விற்பனை கூடங்களும் காணப்படும்.” என்றார்.

இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் ஜொஆன் டோனேவார்ட் கருத்துத் தெரிவிக்கையில்,


“CarFreeCMB என்பதனூடாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. டச்சு நாட்டவர்கள் எனும் வகையில், எமது நாட்டின் பிரதான நகரங்களில் சைக்களில் பயணம் செய்வதில் நாம் புகழ்பெற்று திகழ்கின்றோம். சுகாதாரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தேசிய புள்ளி விவரங்களில் இதன் பிரதிபலிப்பை அவதானிக்க முடிகின்றது.

வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நடை அல்லது சைக்கிளோட்டத்துக்காக குடும்பங்களை ஒன்றிணைப்பதில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் நிகழ்வு சிறந்த ஆரம்பமாக அமையும். இந்த திறந்த வீதிகள்ரூபவ் நீண்ட போக்குவரத்து நெரிசலின்றி, அல்லது மோட்டார் வாகனங்களின்றி மக்களுக்காக திறந்திருக்கும். தூய காற்றை அனுபவிக்க முடியும் என்பதுடன் பல களிப்பூட்டும் செயற்பாடுகள் மற்றும் பிளாஸ்ரிக் தவிர்ந்த செயற்பாடுகளை கொண்டிருக்க முடியும்.

கொழும்பின் இந்த அழகிய பகுதிகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க நான் எதிர்பார்க்கின்றேன்.” என்றார். டச்சு தூதரகத்தினால் வெளியிடப்பட்ட யள அம்ஸ்டர்டாமைச் சேர்ந்த மக்கள் தமது கார்களை செலுத்துவதை விட சைக்கிள்களில் பயணிப்பதில் அதிகளவு ஈடுபடுகின்றனர்.

சைக்கிளோட்டம், கார் பாவனையற்ற பகுதிகள், நகர மையப் பகுதிகளை வாகனங்கள் அணுகுவதை குறைத்தல், சைக்கிள் செலுத்தக்கூடிய ஒழுங்கைகளை உருவாக்கல் மற்றும் நகர திட்டமிடல் மற்றும் வீதி வடிவமைப்பினூடாக சைக்கிளோட்டத்தை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளினூடாக அந்நாட்டு அரசாங்கம் இந்த ஊக்குவிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார, சூழல் மற்றும் சுகாதார அனுகூலங்களுக்கு மேலாக, சைக்கிளோட்டத்தினூடாக மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியன மேம்பட்டுள்ளதுடன், பாதுகாப்பான மற்றும் சுபீட்சமான நகரங்களின் உருவாக்கத்துக்கும் ஏதுவாக அமைந்துள்ளன.

பல நாடுகளில் Car-Free Day (CFD) முன்னெடுக்கப்படுவதுடன் பிரதான நோக்கம், பொது மக்கள் மத்தியில் எரிபொருள் பாவனையை குறைத்து, மாற்று போக்குவரத்து முறைகளுக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.

Copernicus Climate Change Service (ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கைகோள் முகவர் நிறுவனம்) இனால் வழங்கப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில்,

புவியில் இதுவரையில் பதிவாகியிருந்த மிகவும் வெப்பமான ஜுன் மாதமாக கடந்த மாதம் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புவியை அனைவரும் உயிர் வாழ்வதற்கு உகந்ததாக பேண வேண்டிய பொறுப்பு அனைவரையும் சேர்ந்ததாகும். ஜகார்தா மற்றும் கோலாலம்பூர் போன்ற உலகின் மிகவும் வேலைப்பளு நிறைந்த 200க்கும் அதிகமான நகரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளை car-free தினங்களாக பின்பற்றி வருகின்றன.

இலங்கையில் இந்த முதற்கட்ட நிகழ்வு வெற்றிகரமாக அமைந்திருந்தால், எதிர்காலத்தில் இது போன்ற திறந்த வீதி நிகழ்வுகளை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.

Hot Topics

Related Articles