உலகம்

லொறி கவிழ்ந்து விபத்து ; 9 பெண்கள் பலி

இந்தியாவின் முண்டவாரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லொறியொன்று வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகள் உட்பட 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா பகுதியில் இருந்து முண்டவாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ஒரு லாரியில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர்.

சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள தேவ்லி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

இதில் 3 சிறுமிகள் உட்பட 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நம்பப்படுகின்றது.

Hot Topics

Related Articles