உலகம்

அங்கர் முன்னெடுத்த “உணவு பாதுகாப்பு, அனைவரின் வியாபாரம்” எனும் தொனிப்பொருளில் உலக உணவு பாதுகாப்பு தினம்

கிரி சாரிகாவினூடாக அங்கர் நியுடேல் தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் பற்றி அறிந்து கொள்ளும் அனுபவம் வழங்கப்பட்டதுடன் தொழிற்சாலை விஜயத்தினூடாக நுகர்வோருக்கு உற்பத்தி செயன்முறைகளை பிரத்தியேகமாக அனுபவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.


உலகளாவிய ரீதியில் காணப்படும் நுகர்வோரை பொறுத்தமட்டில் தாம் உட்கொள்ளும் உணவின் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். இதன் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட உலக உணவு பாதுகாப்பு தினம் 2019 ஜுன் 07 ஆம் திகதி கொண்டாடப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு “உணவு பாதுகாப்பு, அனைவரின் வியாபாரம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

உலக உணவு தர நிர்ணயங்களை பின்பற்றுவது, உணவு பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்புகளை பயன்படுத்துவதை வலிமைப்படுத்துவது மற்றும் ஆரோக்கியமான உணவு தெரிவுகளை மேற்கொள்வது பற்றி நுகர்வோருக்கு விளக்கங்களை பெற்றுக் கொடுக்க உதவுவது போன்றவற்றை உணவு பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள், விஞ்ஞானிகள், தனியார் துறை மற்றும் சிவில் சமூக பணிகள் மூலம் முன்னெடுக்கலாம்.


நுகர்வோருக்கு துறையின் முன்னணி உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பான செயன்முறையை நேரடியாக பார்வையிடும் வாய்ப்பை வழங்க ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா மற்றும் அங்கர் நியுடேல் அண்மையில் ஏற்படுத்தியிருந்தன.

அங்கர் நியுடேல் கிரி சாரிகா எனும் தொனிப்பொருளில் பொது மக்களுக்கு தமது உற்பத்தி செயன்முறைகளை பார்வையிடும் வாய்ப்பை வழங்கியிருந்தது.

இதில் பங்கேற்றிருந்த அவிசாவளையைச் சேர்ந்த சிவலிங்கம் விஷாந்தி கருத்துத் தெரிவிக்கையில்,

பாலுற்பத்தி பொருட்களின் தயாரிப்பின் போது பின்பற்றப்படும் கவனமான செயற்பாடுகள் தமக்கு பிரத்தியேகமான அனுபவத்தை வழங்கியிருந்ததாக குறிப்பிட்டார்.


“நாம் எப்போதும் இந்த தயாரிப்புகளை கொள்வனவு செய்வதுடன், தற்போது இந்த உற்பத்தி செயன்முறை மற்றும் பின்பற்றப்படும் உயர் தரங்கள் போன்றவற்றை கண்டுற்றதன் பின்னர், முன்னரை விட தற்போது அதிகளவு கவரப்பட்டுள்ளோம்.

ஏனெனில் எமது பிள்ளைகளுக்கு எவ்வாறான போஷாக்கு வழங்கப்படுகின்றது என்பதை நாம் அறிவோம்.” என்றார்.
அவிசாவளையைச் சேர்ந்த நவரட்னம் சுதாகரன் குறிப்பிடுகையில்,

தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது, நியுசிலாந்திலுள்ள பாற்தொழிற்சாலைக்கு விஜயம் செய்வதை போன்று உணர்ந்ததாக குறிப்பிட்டார்.

“பால் மா மாத்திரமன்றி, யோகட் தயாரிப்புகளும் இறக்குமதி செய்யப்பட்டதாக நான் கருதினேன். ஆனாலும், தற்போது அவை உள்நாட்டிலிருந்து சேகரிக்கப்படும் பாலைக் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். மிக முக்கியமாக உற்பத்தி செயன்முறைகளின் போது எவ்விதமான சிக்கல் நிலைகளும் தோன்றுவதை தவிர்ப்பதற்காக நிறுவனம் பின்பற்றும் வழிமுறைகளை காண வாய்ப்புக்கிடைத்தமை மிகவும் சிறந்த அனுபவமாகும்.” என்றார்.


இலங்கை மற்றும் இந்திய உபகண்டத்துக்கான ஃபொன்டெரா பிரான்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி விளக்கமளிக்கையில், தமது தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றை எவ்வாறு அவர்கள் உறுதி செய்கின்றனர். 140 க்கும் மேலான நாடுகளில்,

பாற்பண்ணையாளர்கள் முதல் நுகர்வோரை சென்றடையும் வரையிலான ஃபொன்டெராவின் விநியோகத் தொடரில் அமைந்துள்ள ஒவ்வொரு படியிலும் இதை உறுதி செய்வதற்காக அர்ப்பணிப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

“உலகின் எப்பாகத்திலிருந்தாலும் எமது நுகர்வோருக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பது பற்றி தெளிவான தொடர்ச்சியான கட்டமைப்பை நாம் கொண்டுள்ளோம். எமது இறக்குமதி செய்யப்படும் பால் மா வர்த்தக நாமங்களான அங்கர் போன்றன முதல் உள்நாட்டிலிருந்து பெறப்படும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் அங்கர் நியுடேல் தயாரிப்புகள் வரை நலச்செழுமை மற்றும் தரம் ஆகியவற்றில் உயர் தரத்தை நாம் பேணுகின்றோம்.” என்றார்.

“கிரி சாரிகா ஊடாக, நுகர்வோருடன் தெளிவான மற்றும் வெளிப்படையான தொடர்பாடலை ஏற்படுத்துவது எமது இலக்காக அமைந்திருந்தது, அதனூடாக எமது செயன்முறைகள் தொடர்பில் நாம் முழுமையாக திறந்த கொள்கையை கொண்டுள்ளதை அவர்களுக்கு உணர்த்த எதிர்பார்த்தோம்.

தயாரிப்பு வடிவமைப்பு முதல் நுகர்வோரை சென்றடைவது வரை விநியோகத் தொடர் முழுவதிலும்ரூபவ் உயர் தரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் பாற்பண்ணையாளர் வலையமைப்பிலிருந்து 20 வருடங்களுக்கு மேலாக பால் சேகரிப்பு நடவடிக்கையை ஃபொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா முன்னெடுக்கின்றது. இலங்கையின் பாற்பண்ணையாளர்களிடமிருந்து தினசரி 40,000 லீற்றர்களுக்கு அதிகமான பால் சேகரிக்கப்பட்டு, திரவ மற்றும் சுவையூட்டப்பட்ட தயாரிப்புகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் அங்கர் நியுடேல் யோகட் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் போன்றன அடங்கியுள்ளன.

பொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா பற்றி

இலங்கையர்களுக்கு சுமார் 40 வருட காலமாக பொன்டெரா பிரான்ட்ஸ் ஸ்ரீ லங்கா உயர் பாற் போஷாக்கை தனது அங்கர் உற்பத்தி அடங்கலாக சகல தயாரிப்புகளினூடாக வழங்கியுள்ளது. 10,000 க்கும் அதிகமான நியுசிலாந்தின் பாற்பண்ணையாளர்களின் உரிமையாண்மையைக் கொண்ட கூட்டுறவு நிறுவனமாகத் திகழ்வதுடன்ரூபவ் உள்நாட்டில் எமது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்துகின்றோம்.

இலங்கையை சுகாதாரமான, மகிழ்ச்சியான தேசமாக திகழச் செய்வதற்கு நாம் எமது வியாபார பங்காளர் வலையமைப்பின் வியாபாரிகள், விற்பனையாளர்கள், விநியோகத்தர்கள், முகவர்கள் மற்றும் பாற்பண்ணையாளர்களினூடாக சுமார் 100,000 பேருடன் மறைமுகமாக பணியாற்றி வருகிறோம்.

Hot Topics

Related Articles