Huawei Smart Phones மற்றும் Tabs பண மீளளிப்பு உத்தரவாதத்தை வழங்கும் Singer Sri Lanka

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை ! எதற்கு ? மக்களே அவதானம் !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை,...

பைடனுக்கு சுளுக்கு ; விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து

ஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப்...

பாலைவனத்தின் நடுவில் இருந்த உலோகத் தூண் மாயம் – அதிர்ச்சியில் பலர் !

பாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18 ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர்...

கொரோனாவுக்கு எதிராக இலங்கையில் உருவாகும் மருந்து

கொவிட் வைரஸை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் உள்நாட்டு ஆயுர்வேத மருந்தொன்றை பரிசோதனை செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வத்துபிட்டிவல கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில் விசேட வைத்திய குழுவொன்று இந்த பரிசோதனைகளை...

110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை – பயங்கரவாதிகள் அட்டூழியம்

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும்...

Huawei Smart Phones மற்றும் Tabs இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்ற வகையில் Singer Sri Lanka PLC, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய Huawei ஸ்மார்ட்போன் அல்லது Tabs கொள்வனவின் போது பணத்தினை மீளளிக்கும் உத்தரவாதத்தை வழங்க தீர்மானித்துள்ளது.

அதாவது பின்வரும் அப்ளிகேஷன்களில், கூகுள் பிளே, ஜீமெயில், கூகுள் மெப், கூகுள் கெலரி, குரோம், யுடியூப், பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வாட்சப் ஆகியவற்றில் ஏதேனும் இயங்காமல் இருப்பின் வாடிக்கையாளரின் பணம் 100% மீளளிக்கப்படும்.

Huawei உலகின் மிகப்பெரிய மற்றும் முன்னணி ICT நிறுவனமாக வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் முதற்தர ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமாக தெரிவானது.

2012 ஆண்டு முதல் Huawei இற்கான அங்கீகரிக்கப்பட்ட தேசிய விநியோகஸ்தராக இருப்பதுடன், சிங்கர் உலகின் மிக புதுமையான மற்றும் முதல் ஸ்மார்ட்போன்களை இலங்கை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த வெற்றி பயணத்தைத் தொடரவும், அதன் நுகர்வோருக்கு சிறந்த புத்துருவாக்கங்களை வழங்கும் பொருட்டும், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட Huawei Smart Phones மற்றும் Tabsகளை வாங்கிய தினத்திலிருந்து 2 வருட காலத்திற்கான இந்த அறிவிப்பை சிங்கர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் மற்றும் Tabs ஆகியவற்றுடன் வழங்கப்படும் வழக்கமான வன்பொருள் மற்றும் மென்பொருள் உத்தரவாதத்துக்கு மேலதிகமான சிறப்பு உத்தரவாதமாக இது அமையவுள்ளது.

‘Huawei பல வருடங்களாக இலங்கையின் விருப்பத்துக்குரிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமாக இருப்பதுடன் ‘பண மீளளிப்பு உத்தரவாதம்’ அதன் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் அப்ளிகேஷன்களான, கூகுள் பிளே, ஜீமெயில், கூகுள் மெப், கூகுள் கெலரி, குரோம், யுடியூப், பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வாட்சப் ஆகியவற்றில் எதாவது இயங்காமல் இருக்கும் பட்சத்தில் அவை சிங்கரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டவுடன் முழுமையான பண மீளளிப்பு மேற்கொள்ளப்படும்,” என ஜகத் பெரேரா, Singer இன் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள அப்ளிகேஷன்களில் ஏதேனும், தனது Huawei சாதனத்தில் சரியாக இயங்கவில்லை என நுகர்வோர் கண்டறிந்தால், நுகர்வோர் அந்த சாதனத்தை அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு இலவசமாக சோதனைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டம் நுகர்வோர் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேம்படுத்துமெனவும், நிறுவனம் மற்றும் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் சிங்கர் நம்புகின்றது.

Huawei ஸ்மார்ட்போன் அல்லது Tabs ஐ புதிதாக வாங்கும் போதும் சிறப்பு உத்தரவாத அட்டை வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு, நுகர்வோர் சிங்கர் துரித அழைப்பு இலக்கமான 0115 400 400 ஐ அழைக்க முடியும்.

Hot Topics

இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை ! எதற்கு ? மக்களே அவதானம் !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளதுடன் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை,...

பைடனுக்கு சுளுக்கு ; விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து

ஜோ பைடன் தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவரது கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டது. அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப்...

பாலைவனத்தின் நடுவில் இருந்த உலோகத் தூண் மாயம் – அதிர்ச்சியில் பலர் !

பாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது. அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் உள்ள பாலைவன பகுதியில் கடந்த 18 ஆம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஹெலிகாப்டர்...

Related Articles