வளர்ந்து வரும் இந்திய சுற்றுலா துறை வாய்ப்பினை மேலும் உயர்த்துவதற்கு ஏற்றவகையிலான நடவடிக்கைகளில் இலங்கை சுற்றுலா, பல அரச மற்றும் தனியார் பங்காளர்களுடன் இணைந்து கவர்ச்சிகரமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்டணத்துடனான பயண ஒழுங்குகளை ஆரம்பித்துள்ளது.
இந்த செயல்பாட்டு பணிகள் இந்த வாரத்தில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படுகின்றது.
கொழும்பு, கண்டி, நுவரெலியா, தம்புள்ள, சீகிரிய மற்றும் தென் கரையோர பிரதேசங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இந்திய சுற்றுலா பயணிகளை இட்டு செல்லும் நோக்கில் ஐந்து கவர்ச்சிகரமான மற்றும் பெறுமதியான ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் கட்டணத்துடன் இந்த பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
42 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 258 பேர், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் முதலாவது பிரச்சார முறையிலான நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசேட சலுகையுடனான பயணம் 10ஆம் திகதி ஆரம்பமான நிலையில், எதிர்வரும் 30 செப்டம்பர் 2019 வரையில் குறிப்பிட்ட இடங்களுக்கு இந்திய சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளுக்கான முன் பதிவுகள் இந்திய பயண முகவர்களின் வலைப்பின்னலின் ஊடாக மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2018 செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், இதே போன்ற விளம்பர பிரசாரத்தின் போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் இந்திய சுற்றுலா பயணிகள் செலவிடும் முறைமையினை அவதானித்தது.
இந்த வருடம் இலங்கை சுற்றுலாத்துறை, இலங்கை உள்வருகை சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சங்கம் (SLAITO), இலங்கை விருந்தகங்களின் சங்கம் (THASL) மற்றும் இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் சேவை என்பன இணைந்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
மிக விரைவில் இந்த பிரசார நடவடிக்கைகளை செயல்படுத்தும் அதேவேளை, வளர்ந்து வரும் சீன சந்தையிலும் இந்த திட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது எமது சுற்றுலா தலங்கள் மற்றும் விருந்தகங்கள் முழு அளவில் செயல்படுவதுடன் நாட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதற்கு ஆவலுடன் தயார் நிலையில் இருப்பதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசி துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்திய நகரங்களுடன் விமான சேவைகளை மேற்கொண்டுள்ள தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் சேவை பரந்த அளவிலான சேவையினை வழங்க முன்வந்துள்ளது.
இலாப நோக்கம் அற்ற விதத்தில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் விமான சீட்டு, காலை உணவு மற்றும் விருந்தக தங்குமிட வசதி என்பன ஒரே பொதியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தவிர, உள்ளுர் போக்குவரத்து, மற்றும் சுற்றுலா இயக்குனர்களின் சேவைக்கட்டணம் எனபனவும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிலையத்தின் ஊடாகவும் 15 வெவ்வேறான பெறுமதியுடனான மூன்று பிரிவுகளைக் கொண்ட ஐந்து பொதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை தரநிலை, உயர்நிலை முதல் உயர்ந்த தகுதியுடையவையாக கணிக்கப்பட்டள்ளன.
கடந்த தசாப்தகாலத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை சுற்றுலா சந்தையில் முதன்மை நிலையில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் 400,000 இற்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைந்து இலங்கை தேசிய விமான சேவையான ஸ்ரீ லங்கன் சேவை வாரந்தரம் 120 சேவைகளை நடத்துகின்றது.
இதன் மூலம் துரித கதியில் இலங்கை தொடர்பான விடயங்கள் இந்திய நகரங்களின் ஊடாக பிரபலப்படுத்தப்படுவதாக தாம் எண்ணுவதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் உலகளாவிய விற்பனை மற்றும் விநியோக தலைவரான திமுத்து தென்னக்கோன் தெரிவித்தார்.
புள்ளி விபரங்களுக்கு அமைய இலங்கையின் பாரிய அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்தே வருகை தருகின்றனர். 2018 ஆம் ஆண்டில் 424,887 பயணிகள் வருகை தந்துள்ளனர், அல்லது மொத்த பயணிகளில் 18.2 சத வீதமாகும். அதற்கு முந்தைய வருடத்தில் 10.5 சத வீதமாக பதிவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 426,000 எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.
ஓய்விற்கும் மேலாக திருமணங்கள், திரைப்பட தயாரிப்புக்கள் போன்ற நடவடிக்கைகளை இலங்கையில் மேற்கொள்ள பிரச்சாரங்களை முன்னெடுக்க இலங்கை தீர்மானித்துள்ளது.
180 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் மாஸ்டர் கார்டை கொண்டுள்ளனர். அவை சிறந்த முறையில் தடப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா இந்த குறிப்பிட்ட பொதியை பிரபலப்படுத்த முன்வந்துள்ளது.
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான மாஸ்டர் கார்ட்டின் வதிவிட முகாமையாளர் சந்தோஷ் குமார் இந்த திட்டத்தில் பங்காளராக உரிய நேரத்தில் ஆர்வத்துடன் செயல்படுவதாக தெரிவித்தார்.