உலகம்

துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி, 6 பேர் காயம் – அமெரிக்காவில் சம்பவம்

Virginia Beach : அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வேர்ஜினியா பீச் பகுதியிலுள்ள மாநாகரசபைக்கு சொந்தமான அரச கட்டத்திலேயே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.


இச் சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட ஆயுததாரி பொலிஸாரினால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


காயமடைந்த 6 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Hot Topics

Related Articles