உலகம்

வெளியாக தயாராகிறது கங்கை அமரனின் கரகாட்டகாரன் – 2

கங்கை அமரன் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.


ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வாகை சந்திரசேகர், சண்முகசுந்தரம் ,காந்திமதி, சந்தானபாரதி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் வெளியாகி, பெரும் வசூல் வெற்றியை பெற்ற படம் ‘கரகாட்டக்காரன்’. இதனை இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார்.


அண்மையில் ஒரு நிகழ்வில் பேசிய கங்கை அமரன், கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்பட நாயகனான ராமராஜனடம் விவாதித்து வருவதாகவும், மேலும் சில நடிகர்களிடம் இது குறித்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் நடிகர்களின் வாரிசுகள் பற்றிய கதையாக அமையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக விரைவில் கரகாட்டகாரன் =2 பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று திரையுலக வட்டாரங்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி அடுத்த பாகத்திலும் இடம்பெறுமா? என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles