இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முகாமைத்துவ இயக்குனராக சாமரி மாஎல்கே 23 மே மாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத்துறைக்கு புதியவர் அல்லாத சாமரி மாஎல்கே, சுற்றுலா சபையின் சந்தைப்படுத்தல் பிரிவின் சந்தைப்படுத்தல் இயக்குனராக பணியை ஆரம்பித்தார்.
அதனையடுத்து ஐக்கிய ராச்சியத்தின் லண்டன் காரியாலயத்தின் இயக்குனராகவும் ஆராய்ச்சி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான இயக்குனர் ஆகிய பொறுப்புக்களை ஏற்றார்.
அதன் பின்னர் ஐக்கிய ராச்சியத்தை தளமாக கொண்ட பயண அறக்கட்டளையில் பணியாற்றினார். இதன்போது அவர் இலங்கையின் சுற்றுலா பங்களிப்பினை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பினை உருவாக்கினார்.
அவர் தேசிய மற்றும் தனியார் சுற்றுலா துறை அனுபவத்தை கொண்டுள்ளதுடன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட சுற்றுலா பயிற்றுவிப்பாளராகவும் மதிப்பீட்டாளராகவும் திகழ்கின்றார்.
தற்போது அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விருந்தோம்பல் மற்றும் ஓய்வு முகாமைத்துவ பிரிவுகளின் வருகை விரிவுரையாளராக செயல்படுகிறார். அரசாங்கத்தில் உள்ள பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக இடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முகாமைத்துவம், சுற்றுலாத்துறையினை மீட்டெடுத்தல் போன்றவை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்திற்கு பெறுமதியான பலத்தை அளிக்கும்.
இந்த தருணத்தில், அரசாங்கத்திற்கும் இலங்கை சுற்றுலாத் துறைக்கும், சாமரி மாஎல்கேயின் அனுபவம், மிகப்பெரிய பெறுமதி வாய்ந்ததாக திகழ்வதுடன் அவர் இந்த முக்கிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவடைவதாக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசி மற்றும் கத்தோலிக்க விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சாமரி மாஎல்கே, வர்த்தக நிர்வாகத்தில் முதுமானி பட்டத்தை பெற்றதுடன் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தக இளம்கலை பட்டதாரியாவர். அவர் பிரித்தானியாவின் CIM பட்டய நிறுவனத்தின் உறுப்பினர் என்பதுடன் இலங்கை SLIM பட்டத்தையும் பெற்றவராவர்.