உலகம்

Huawei P30 Lite துணையுடன் ஒவ்வொரு செல்ஃபியிலும் அழகின் தனித்துவத்தை வசப்படுத்துங்கள்

Huawei ஸ்மார்ட்போன் குடும்பத்தில் இணைந்துள்ள மற்றுமொரு நம்பிக்கைக்குரிய தொலைபேசி சாதனமான Huawei P30 Lite செல்ஃபி பிரியர்கள் அனைவரையும் பெரு மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.


அது கொண்டுள்ள 32MP முன்புற கேமராவானது மிகவும் அழகிய புகைப்படங்களை, இலாவகமாக வசப்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்கின்றது.

தற்காலத்தில் அனைத்து சந்தைப் பிரிவுகளிலும் செல்ஃபி எனப்படுகின்ற கலாச்சார மோகம் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் அதற்கான தேவைப்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் செல்ஃபி பிரியர்கள் அனைவரினதும் கனவுகளை நனவாக்கும் வகையில் தொழிற்துறையில் அதிநவீனமான 32MP முன்புற கேமராவுடன் அனைத்திலும் புதிய Huawei P30 Lite இனை HUAWEI அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொருவரினதும் வதனங்களும் வேறுபட்டவை என்பதுடன் தனித்துவமானவை. HUAWEI இன் செயற்கை நுண்ணறிவு (AI) வலுவூட்டல் கொண்ட செல்ஃபி தொழில்நுட்பமானது உங்களுடைய தனித்துவமான முக வடிவம் மற்றும் வகைப்பாட்டின் அடிப்படையில் உங்களுடைய சுய புகைப்படங்களை அழகுபடுத்துகின்றது. உங்களுடைய சிறப்பம்சங்களின் வெளித்தோற்றங்களை இத்தொழில்நுட்பம் பிரதிபலிப்பதுடன் நீங்கள் எப்போதும் உங்களது மிகச் சிறந்த தோற்றங்களை காண்பிப்பதை உறுதி செய்யும் வகையில் தனிப்பயன் படிமுறையையும் தோற்றுவிக்கின்றது.

Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு இது தொடர்பில் குறிப்பிடுகையில்,

“ஸ்மார்ட்போன் கேமராக்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் செல்ஃபி படங்கள் காணப்படுகின்றன. மிக வேகமாக வளர்ச்சி மாற்றம் கண்டு வருகின்ற உலகில் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் போக்குகளைத் தழுவ வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதுடன் 32MP முன்புற கேமராவானது மில்லேனிய தலைமுறையின் தேவைகளை ஈடு செய்வதற்கு எமக்கு இடமளிப்பதுடன் பாவனையாளர்கள் தமது மிகச் சிறந்த செல்ஃபிகளை வசப்படுத்தி, தமது படங்களை நேர்த்தியாக அழகுபடுத்திக் கொள்வதற்கு இடமளிக்கின்றது” என்று குறிப்பிட்டார்.

அடுத்த தலைமுறை முன்புற கேமராவுடன்ரூபவ் மிகவும் கவருகின்ற அழகிய, துல்லியமான மற்றும் தெளிவான விபரங்கள் கொண்ட செல்ஃபிகளை வசப்படுத்திக் கொள்வதற்கு HUAWEI P30 Lite தயாராக உள்ளது. கூடுதல் அம்சமாக இது AI தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கம் கொண்டது என்பதால் HUAWEI P30 Lite முன்புற கேமராவானது நொடிப்பொழுதில் 8 இற்கும் மேற்பட்ட வகைப்பாடுகளை அடையாளம் கண்டு கொள்வதுடன் பின்புற கேமராவானது 22 வேறுபட்ட வகைப்பாடுகளை இனங்கண்டு கொள்கின்றது.

மலைக்க வைக்கும் புகைப்படங்களை வசப்படுத்திக் கொள்வதற்கு நிறம் வெளிச்சம் மற்றும் மாறுபாடு ஆகியவற்றை தன்னியக்க முறையில் சீரமைத்துக் கொள்வதுடன் புகைப்படம் எடுக்கப்படும் நபரை அல்லது பொருளை வேறாக அழகுபடுத்தும் அதேசமயம் சிறப்பம்சங்கள் அனைத்தையும் உச்சப்படுத்தும் தனித்துவமான தொகுதி ஒன்றையும் கொண்டுள்ளது. அழகுபடுத்தும் வழிமுறைகள் தொடர்பில் உலகெங்கிலும் மக்கள் அழகினை எந்த வகையில் நோக்குகின்றனர் என்பதை கருத்தில் கொண்டு வேறுபட்ட பாலார் மற்றும் சரும நிறம் கொண்ட மக்களை வெவ்வேறு வழிகளில் சீர்படுத்திக் கொள்ளச் செய்கின்றது.

இச்சிறப்பம்சங்கள் சருமத்தின் சாயல் அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த பிரகாசம் ஆகியவற்றை உச்சப்படுத்தும் வகையில் அழகிய உருவப்படங்கள் மற்றும் செல்ஃபி படங்களை வசப்படுத்துவதற்கு பாவனையாளர்களுக்கு இடமளிக்கின்றது. காட்சியின் அடிப்படையில் கேமரா தன்னியக்க முறையில் சீரமைக்கப்படுவது புகைப்படத்தின் மிகச் சிறந்த தரத்தை வெளிக்கொண்டு வருவதற்கு Master AI இனால் இனங்காணப்படுகின்றது.

வழக்கமான குறிப்பிட்ட சிறப்பம்சங்களை மழுங்கடிக்காது அல்லது சிதைவடையச் செய்யாதுரூபவ் அதன் இயற்கையான அசல் தோற்றத்தைப் பேணிப் பாதுகாத்தவாறு செல்ஃபி படங்களை வசப்படுத்தும் Huawei செயற்கை நுண்ணறிவு வலுவூட்டப்பட்ட அழகுபடுத்தல் தொழில்நுட்பம் உங்களது கவர்ச்சியையும். சிறப்பம்சங்களையும் மேம்படுத்த உதவுகின்றது.

P30 Lite கொண்டுள்ள செல்ஃபி படங்களுக்கான பிரத்தியேக நடைமுறை தொனியைக் கட்டுப்படுத்தி, கண்களில் வசீகரத்துடன் சருமத்தின் சாயலை பிரகாசிக்கச் செய்கின்றது. மேம்பட்ட AI தொழில்நுட்பமானது பாவனையாளரை அவரின் பால் மற்றும் வயது அடிப்படையில் வகைப்படுத்தி, இனங்காண்பதுடன் பாவனையாளரின் தனித்துவத்திற்கு ஏற்ற வகையில் பிரத்தியேகமான அழகுபடுத்தல் தொழில்நுட்பமும் உள்ளக்கப்பட்டுள்ளது.

HUAWEI P30 Lite இன் மேம்பட்ட RAM மற்றும் தேக்ககம் ஆகியன இலகுவில் அடையப்பெறக் கூடிய அளவில் இன்னும் கூடுதலாக தரவு விபரங்களை சேமித்துக் கொள்வதற்கு கூடுதல் தேக்கக வசதியை வழங்குகின்றன. RAM இல் கிடைக்கப்பெறும் 6 GB memory ஆனது 128 GB உள்ளக memory இனையும் கொண்டுள்ளது. HUAWEI 9V2A Quick Charge மூலமாக வலுவான 3340 mAh மின்கலமானது வேகமாக மின்னேற்றம் செய்யப்படுவதுடன் நீடித்த நேரம் உழைக்கின்றது.

இச்சாதனமானது அதிநவீன அழகுபடுத்தல்ரூபவ் நுண்ணறிவு உச்சமயப்படுத்தல் மற்றும் மேம்பட்ட புகைப்பட தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் Huawei P30 Lite மூலமாக பாவனையாளர்கள் நேர்த்தியான தருணங்களை வசப்படுத்தி அனுபவித்து மகிழ முடியும். இச்சாதனம் இலங்கையிலுள்ள அனைத்து HUAWEI அனுபவ மையங்கள் சிங்கர் காட்சியறைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட டயலொக் அக்ஸியாட்டா மற்றும் மொபிடெல் காட்சியறைகளில் கிடைக்கப்பெறுவதுடன் ரூபா 53,999 என்ற விலையில் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Hot Topics

Related Articles