உலகம்

காலாண்டில் இதுவரையில்லாத அதிக இலாபம் ஈட்டியது SLT

2018 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க 86.8% வளர்ச்சியுடன், எந்தவொரு ஆண்டின் முதல் காலாண்டிலும் பெறாத மிக அதிகபட்சமாக 2.20 பில்லியன் நிகர இலாபத்தைப் பெற்றுள்ளது. ஆரோக்கியமான வருவாய் வளர்ச்சி மற்றும் செலவுக் கட்டுப்பாட்டு முயற்சிகள் இரண்டும் இணைந்து இதனை சாத்தியப்படுத்தின.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஏற்பட்ட நாணயமாற்று இழப்பான ரூ 294 மில்லியனோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் நாணயமாற்று உழைப்பாக ரூ 172 மில்லியன் கிடைக்கப் பெற்றமையும் காலாண்டு இலாப அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளது.

குழுமத்தின் வருமானமாக ரூபா 21.3 பில்லியன் இக்காலத்தில் ஈட்டப்பட்டிருந்ததோடு இது 7.9% வருடாந்த வளர்ச்சியாகும். நிலையான மற்றும் மொபைல் பிராட்பேண்ட் சேவைகள், PEO தொலைக்காட்சி சேவைகள், தேசிய முதுகெலும்பான வலையமைப்பு சேவைகள், டிஜிட்டல் சேவைகள், அரச மற்றும் நிறுவனங்களுக்கான அறிவார்ந்த வணிகத் தீர்வுகள் ஆகியவற்றில் இந்த வளர்ச்சி வேகமானது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.

இந்தக் காலப்பகுதியில் செயல்பாட்டு செலவினங்களை அதன் வருவாய் வளர்ச்சி வீதத்திலும் குறைவாக 4.6% அதிகரிப்புடன் இக்குழுமத்தால் நிர்வகிக்க முடிந்தமையானது குறிப்பாக உடைமைக் கம்பனியின் செலவுக் கட்டுப்பாட்டு முயற்சிகள் மூலமாகும்.

இது குழும EBITDA வருடாந்தம் 15.3% ஆல் 7.0 பில்லியன் ஆகவும் EBITDA வரம்பை 33.0% ஆகவும் உயர்த்தியுள்ளது.

குழுமத் தலைவர் குமரசிங்க சிரிசேன, கருத்துக் கூறுகையில்:


“நாட்டில் தேசிய தொடர்பாடல் சேவை வழங்குனரான நாம், தொழில் துறையில் வலுவான போட்டி இருந்த போதிலும், 2019 இன் முதலாவது காலாண்டில் இந்த சிறந்த செயல்திறனை பதிவு செய்தமையையிட்டு மிகவும் மகழ்ச்சியடைகின்றோம்.

எந்தவொரு ஆண்டினதும் முதலாவது காலாண்டில் மிக அதிக இலாபம் தரும் சிறந்த செயல்திறனை அடைவதென்பது ஒரு எளிதான விஷயம் இல்லை, நான் என் நம்பிக்கையான பணியாளர் குழுவின் கடினமான, அர்ப்பணிப்புமிக்க பணிகளை இத்தருணத்தில் பாராட்டுகின்றேன்.

தேசிய டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான கணிசமான முதலீடுகளுடன் இந்த குழு தொடர்கிறது, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா முயற்சிகளுக்கு உதவுகிறது மற்றும் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.

நாம் ஏற்கனவே இந்தத் தீவுக்கான தேசிய அதிவேக இழைய முதுகெலும்பு வலையமைப்பினை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் உறுதி செய்கின்றோம். இதன்மூலம் மேலும் வலுவாக எதிர்வரும் ஆண்டுகளில் SLT மேலும் பல சாதனைகளைப் புரியும் என்று நம்புகிறேன்,

ஏனெனில் அதற்கென நாங்கள் எங்கள் உத்திகள் மற்றும் திட்டங்களில் பல மாற்றங்களை செயல்படுத்துகின்றோம். இந்த காலாண்டில், உடைமைக் கம்பனி , ரூ.1.15 பில்லியன் நிகர இலாபம் ஈட்டியுள்ளது.

இதன் மூலம் 248% வருடாந்த வளர்ச்சி காண்பிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வருடாந்த செயற்பாட்டு செலவின குறைப்பு 2.7% மற்றும் முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஏற்பட்ட நாணயமாற்று இழப்பான ரூ 233 மில்லியனோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் நாணயமாற்று உழைப்பாக ரூ 20 மில்லியன் கிடைக்கப் பெற்றமையும் உடைமைக் கம்பனியின் காலாண்டு இலாப அதிகரிப்பிற்கு பங்களித்துள்ளது.

இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 6.3% வருடாந்த வளர்ச்சியுடன் ரூ. 12.2 பில்லியனாக பதிவு செய்யப்பட்டமைக்கு வணிக விரிவாக்கமும் வழிவகுத்துள்ளது.

இலங்கையின் முன்னோடி மற்றும் தேசிய தொலைதொடர்பு சேவை வழங்குனராக திகழும் SLT நிறுவனம், நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கோடு ஃபைபர் டு த ஹோம் (FTTH) மற்றும் 4 ஜி LTE போன்ற விரிவான முதலீட்டு திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக நாட்டில் முக்கிய தேசிய உட்கட்டமைப்பு தீர்வுகளில் SLT தனது முதலீடுகளை தொடர்கின்றது. நிறுவனத்தின் EBIDTA வானது 34.6% EBIDTA எல்லையுடன் ரூ. 4.2 பில்லியனாக அறிவிக்கப்பட்டது.

“2022 ஆம் ஆண்டளவில் 2 மில்லியன் FTTH ஃபைபர் புரோட்பேண்ட் போர்ட்களை உருவாக்குவது என்பது எங்கள் இலட்சியமாகும். அப்போதுதான் நாட்டிலுள்ள எங்கள் மதிப்புமிக்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உயர் தரத்திலான ஃபைபர் புரோட்பேண்ட் அனுபவத்தை வழங்க முடியும்.

நாட்டினுடைய ஒவ்வொரு மூலையையும், உலகெங்கிலும் கிழக்கிலிருந்து மேற்குவரை இணைக்க முக்கிய நார் இணைப்பு உட்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோம். தரவு மையம் மற்றும் க்ளொஃட் போன்ற பிற உட்கட்டமைப்புகளில் முதலீடு செய்ததன் மூலம், நாங்கள் டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றோம்.

அடுத்த சில மாதங்களில் மேலும் தயாரிப்புகளும் தீர்வுகளும் வெளியிடப்பட உள்ள நிலையில் SLT டிஜிட்டல் வாழ்க்கை முறை வழங்குநர் என்ற நிலையை எட்டுவதற்காகச் செயலாற்றுகின்றது. மேலும் டிஜிட்டல் பங்காளர் முறைமையினை ஒரு வலுவான மூலோபாயத்துடன் அபிவிருத்தி செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இது எங்களது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பெறுமதியினை வழங்கும் வகையில் முக்கிய பங்கு வகிக்கும்.” என்றார் உடைமைக் கம்பனியின் பிரதம நிறைவேற்றதிகாரியான கித்தி பெரேரா.

வியாபார வளர்ச்சியின் வேகமானது முழு வியாபாரப் பிரிவுகளாலும் ஆனது – குறிப்பாக பெரிய அளவிலான வலையமைப்பு நிறுவுதல் – கம்பியிழை வலையமைப்பு விரிவாக்கமூடாக வாடிக்கையாளர்களுக்கு ஃபைபர் வழியாக பல திறன் சேவைகளை வழங்குகிறது. தேசிய மூலாதார வலையமைப்பு உரிமம் கொண்ட வழங்கியான SLT ஆனது நாடெங்கும் வலையமைப்பை வரிவாக்குவதில் தீவிரமாக முதலீடு செய்து ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் பைபர் வலையமைப்பு உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய அடுக்கு III தரவு மையம் அதன் விரிவாக்கத்தின் இரண்டாம் கட்டத்தைத் துவக்கியுள்ளது. உலகளாவிய நீருக்கடியிலான கேபிள்களுடன் இணைக்கும் திறன் கொண்ட உலகளாவிய தரவு மையத்தை அமைக்கும் முயற்சிகளை அது ஆரம்பித்துள்ளது. அடுக்கு IV முடிவடையும் தறுவாயில் உள்ளது.

SLT இன் பிரதான செயற்பாட்டு உத்தியோகத்தர் (COO) திரு. பிரியந்த பெர்ணான்டஸ் கருத்துக் கூறுகையில்,


“எமது நோக்கம், எப்போதும் முன்னணியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளருடன் இணைந்து சிறப்பான செயற்பாட்டுக்காக கவனம் செலுத்துவதாகும்.

தற்போதுள்ள தயாரிப்புகள் மற்றும் சேவைகளிலும் மற்றும் எமது புதிய கூட்டு முயற்சிகளிலும் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் SLT அடுத்த படிநிலைக்குத் தயாராகியிருப்பதைக் காட்டுகின்றது.”

கம்பனியின் பிராந்திய வணிக நடவடிக்கைகளின் அண்மைய மறுசீரமைப்பானது நாட்டின் வணிக ரீதியான டிஜிட்டல் வாழ்க்கைமுறை சேவை வழங்குனராக SLT யினை மாற்றுவதில் அதிகளவிலான பங்களிப்பினை நல்கியிருக்கின்றது.

SLT இன் கையடக்கத் தொலைபேசிப்பிரிவான Mobitel Pvt Ltd சந்தையில் நிலவுகின்ற கடுமையான போட்டிக்கு மத்தியிலும், அதன் வருவாய் மற்றும் முக்கிய இலாபகரமான குறிகாட்டிகளை வளர்த்துக் கொண்டது. 2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வருமானம் 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6% வீதத்தால் அதிகரித்து 10.1 பில்லியன் ரூபாவாக உள்ளது. முக்கியமாக புரோட்பேண்ட் சேவைகள் மூலமே இந்த வருவாய் வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

வருமான வளர்ச்சியானது 2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் அனைத்து முக்கிய இலாபத்தன்மை குறிகாட்டிகளிலும் பங்களிப்புச் செய்துள்ளது. EBITDA மற்றும் EBITஎன்பன முறையே 5% மற்றும் 2% வருடாந்த வளர்ச்சியடைய செயற்றிறன் முன்னேற்றமும் பங்களித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதிக்கான நிகர இலாபம் 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களின் நிகர இலாபமான ரூபா 0.84 பில்லியனுடன் ஒப்பிடும்போது 1.11 பில்லியன் ரூபாயாக உள்ளது. இலாபம் அதிகரித்தற்கான முக்கிய காரணம் இக்காலப்பகுதில் ரூபாயின் பெறுமதி அதிகரித்தமையாகும். 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர இலாப வளர்ச்சி 32% ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


“எங்கள் சமீபத்திய காலாண்டு நிதி முடிவுகளை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இது கடுமையான போட்டி சூழல் இருந்தாலும்கூட, எங்களது முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன என்பதையே காட்டுகின்றது. கடந்த ஆண்டு நாங்கள் எமது வலையைமப்பை கட்டமைப்பதில் முதலீடு செய்தோம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிகளை உருவாக்கினோம்.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 32 வீத அதிகரிப்பாக 1.1 பில்லியன் ரூபாவிலும் மேலான இலாபம் ஈட்டியுள்ள நிலையில் மொபிடெல் வெற்றிகரமான வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது.” என, மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி நலிந்த பெரேரா கூறினார்.

Hot Topics

Related Articles