கொழும்பு கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் அலோ அவினியுவிற்கு அண்மையில் நவநாகரீக ஆடையகமான Trendy Hub தனது காட்சியறையை திறந்துள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றம் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டதுடன், கிரிக்கெட் நட்சத்திரமான மஹேல ஜயவர்தனவும் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
Trendy Hub இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆடைகள் லண்டன், பரிஸ் மற்றும் மிலான் நகரங்களில் காணப்படும் ஆடைகளுக்கு நிகரானவையாக அமைந்துள்ளன.
YNM Trendy Hub பிரைவட் லிமிடெட்டின் பங்குதாரரான அன்ரியு பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது காட்சியறைக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு தடவையும் விஜயம் செய்யும் போது, அவர்கள் பூரிப்படைய வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
உலகின் நவநாகரீக நகரங்களில் காணப்படும் ஆடைத் தெரிவுகள் எமது காட்சியறையில் அமைந்துள்ளன. இதனூடாக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிரத்தியேகமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
எந்தவொரு தருணத்துக்கும் பொருத்தமான சிறந்த ஆடையை ஒரு காட்சியறைக்கு விஜயம் செய்து பெற்றுக் கொள்ள முடிவது என்பதை சிந்தித்து பாருங்கள், வார இறுதிநாள் அணியக்கூடிய ஆடைகள், தொழிலுக்கு அணியக்கூடிய ஆடைகள் அல்லது மாலைப் பொழுதில் அணியக்கூடிய ஆடைகள் என பல தெரிவுகள் காணப்படுகின்றன. இதுவே Trendy Hub வழங்கும் அனுபவமாகும்” என்றார்.
Trendy Hub தனது முதலாவது காட்சியறையை கொழும்பு சிட்டி சென்ரரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்திருந்தது. இந்த காட்சியறை, சிட்டி சென்ரரில் அதிகளவு வரவேற்பைப் பெற்ற விற்பனை நிலையமாக குறுகிய காலத்தில் புகழ்பெற்றுள்ளது.
இதில் சகாயமான விலை மற்றும் புதிய தெரிவுகள், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சொப்பிங் அனுபவம் போன்றன அடங்கியுள்ளன.
கொள்ளுப்பிட்டியில் Trendy Hub தனது புதிய காட்சியறையை திறந்துள்ள நிலையில், சொகுசான மற்றும் அதிகளவு இட வசதி படைத்த ஆடைகள் தெரிவு மற்றும் கொள்வனவு அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அத்துடன், நகரின் மத்தியில் காலி வீதியில் இலகுவாக அணுகக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது.
Trendy Hub இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆடைகள் கொழும்பின் நவநாகரீகத் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளன. நுணுக்கமான தையல் நுட்பங்களுடன், மென்மையான ஆடைகள் என சகல தெரிவுகளுக்கும் இந்த வர்த்தக நாமம் புகழ்பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தையல் நுட்பம், வர்ணமயமான தெரிவுகள் மற்றும் கண்கவர் அலங்காரங்கள் பதிக்கப்பட்ட ஆடைகள் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் Trendy Hub இல் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த காட்சியறையில் அதிகளவு இடவசதி காணப்படுவதுடன் மாற்றும் அறைகளும் காணப்படுகின்றன.
வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சிறப்பாக பயிற்சிகளைப் பெற்ற ஊழியர்களும் காணப்படுகின்றனர்.
YNM கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பிரைவட் லிமிடெட்டின் துணை நிறுவனமாக Trendy Hub திகழ்கிறது. இந்த நிறுவனத்தை அதன் பங்காளர்களான YNM கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் தலைவர் யூனுஸ் நூர் மொஹமட், சானக பெரேரா மற்றும் அன்ரியு பெரேரா ஆகியோர் இணைந்து நிறுவியுள்ளனர்.
புதிய தெரிவுகளை Trendy Hub இன் Instagram (@trendyhubynm), Facebook (trendyhubynm) அல்லது www.trendyhubsl-ynm.com எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.