உலகம்

அழுத்தத்தை சீனாவின் பாரிய தொலைதொடர்பாடல் நிறுவனம் எதிர்க்கும் – Huawei தலைமை அதிகாரி ரென் செங்ஹீய்

Huawei இற்கு அமெரிக்காவின் chips சாதனங்கள் தேவையில்லையெனவும் டிரம்ப் விதித்துள்ள ஏற்றுமதி தடை மற்றும் வாஷிங்டன் விடுக்கும் அழுத்தத்தை சீனாவின் பாரிய தொலைதொடர்பாடல் நிறுவனம் எதிர்க்குமென Huawei நிறுவனத்தின் தலைமை அதிகாரி கருத்து ரென் செங்ஹீய் தெரிவித்துள்ளார்.


“நாம் ஏற்கனவே இதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை” காரணமாக Qualcomm மற்றும் ஏனைய அமெரிக்க வழங்குனர்கள் Huawei இற்கு chips சாதனங்களை விற்பனை செய்வதை நிறுத்தினாலும் கூட எமது நிறுவனத்திற்கு “ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்று Huawei Technologies பிரதம நிறைவேற்று அதிகாரியான ரென் செங்ஹீய் அவர்கள் கூறியுள்ளார்.

ஷென்ழேன், சீனா – Huawei Technologies நிறுவனத்தின் ஸ்தாபகரும்ரூபவ் தலைமை அதிகாரியுமான ரென் அவர்கள் தனது நிறுவனத்தை அரசாங்கத்தின் கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு டிரம்பின் நிர்வாகம் தீர்மானித்துள்ளமையை எதிர்த்து தனது பேரதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் சீன தொலைதொடர்பாடல் சாதன தயாரிப்பு நிறுவனம் எவ்விதமான சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சட்டத்தை மீறுகின்ற எந்த விதமான நடவடிக்கையிலும் நாம் ஈடுபடவில்லை,” என Huawei உடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானம் வெளிவந்த பின்னர் முதன்முதலாக கடந்த சனிக்கிழமையன்று ஷென்ழேனிலுள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற நேர்காணலில் ஜப்பானிய ஊடகமொன்றுக்கு பிரதம நிறைவேற்று அதிகாரியான ரென் செங்ஹீய் கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது உற்பத்திகள் மீது இத்தடையால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் தனது நிறுவனம் தொடர்ந்தும் தனது சொந்த chips சாதனங்களை தயாரிக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் என ரென் குறிப்பிட்டார். Qualcomm மற்றும் ஏனைய அமெரிக்க வழங்குனர்கள் Huawei இற்கு chips சாதனங்களை விற்பனை செய்வதை நிறுத்தினாலும் கூட எமது நிறுவனத்திற்கு “ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்பதுடன் “நாம் ஏற்கனவே இதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதானமாக core processor chips சாதனங்களை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள HiSilicon Technologies என்ற Huawei இன் பிரிவானது, வழங்கலில் தடங்கல் ஏற்படும் வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அதனை கையாளுவதற்காக தானும் இத்தகைய தயாரிப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியான தெரேசா ஹீ டிங்போ அண்மையில் வெளியிட்டிருந்த பகிரங்க மடல் ஒன்றில் “இத்தகைய நிலைமை ஏற்படும் என்பதை பல ஆண்டுகளாவே நாம் எதிர்வுகூறியுள்ளதுடன், அதற்கான மாற்றுத் திட்டத்தையும் நாம் கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக கடுமையான தொனியில் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ள ரென் வாஷிங்டனின் அதிகாரப் போக்கிற்கு தனது நிறுவனம் தலையாட்டாது என்று குறிப்பிட்டார். “அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கி நாம் எமது முகாமைத்துவத்தை மாற்றம் செய்ய மாட்டோம் என்பதுடன், ZTE இணங்கியதைப் போல கண்காணிப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டில் ZTE நிறுவனத்திற்கு எதிராகவும் அமெரிக்கா இத்தகைய ஒரு தடையை விதித்திருந்ததுடன் இச்சீன தொலைதொடர்பாடல் நிறுவனம் திவாலாகும் அளவிற்கு அழுத்தம் கொடுத்திருந்தது.

Huawei வர்த்தகம் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையானது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட ரென், நீண்ட கால அடிப்படையில் நிறுவனம் சிறப்பாக செயற்படும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். “Huawei இன் வளர்ச்சி சற்று மந்தடையும் எனினும் அது சிறிய அளவிலேயே காணப்படும்” என்று ரென் குறிப்பிட்டதுடன் வருடாந்த வருமான வளர்ச்சி வீதம் 20 வீதத்திலும் குறைவாகவே ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

“ஆபத்துக்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு முன்னேறத் துடிக்கின்ற நிறுவனங்கள் மத்தியில் ஒன்றன் பின் ஒன்றாக தனது வர்த்தகப் பங்காளர்களை அச்சுறுத்தும் கொள்கைகள் காரணமாக அமெரிக்கா அதன் நம்பகத்தன்மையை இழக்கும்” என ரென் குறிப்பிட்டார்.

மறுபுறத்தே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வர்த்தக் கொள்கைகள் சீன பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவே அவர் காண்கின்றார். “இதனை விடவும் சூழல் மேம்படும் என்பதே எனது பரிந்துரையாகும்” என ரென் குறிப்பிட்டார்.

அமெரிக்க மண்ணில் தனது நிறுவனத்தை ஸ்தாபிக்கும் வாய்ப்புக்களை Huawei இன் தலைமை அதிகாரி முற்றாக மறுதலித்தார். “எமது உற்பத்தி வசதிகளை தமது நாட்டில் ஆரம்பிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டாலும் கூட நாம் அதனை முன்னெடுக்க மாட்டோம்” என்று ரென் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் 67 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாகங்களை Huawei கொள்வனவு செய்து வருவதுடன் அதில் கிட்டத்தட்ட 11 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாகங்கள் அமெரிக்காவிலிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன. குறிப்பாக குறைகடத்திகள் (semiconductors) தொடர்பில் அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களில் Huawei தங்கியுள்ளதுடன் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைதொடர்பாடல்கள் உபகரணங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கும் என்றே நம்பப்பட்டது.

( (Nikkei Asian Review இற்காக அட்சுஷி நகாயாம )

Hot Topics

Related Articles