உலகம்

குளியாப்பிட்டியவில் பொலிஸ் ஊரடங்கு !

குளியாப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற முறுகல் நிலையையடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.


குளியாப்பிட்டிய கரந்திப்பெல பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் சிலரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, குளியாப்பிட்டிய, பிங்கிரிய, மற்றும், துமலசூரிய பொலிஸ் பிரிவுகளில் 13 ஆம் திகதி காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles