உலகம்

இலங்கையில் பிறந்த இந்திய நடிகர் ஜே.கே.ரித்திஷ் காலமானார்

இலங்கையின் கண்டியில் பிறந்த நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று தனது 46 ஆவது வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.


கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இருப்பினும், 2014 ஆம் ஆண்டு அவர் அதிமுகவில் இணைந்தார். தற்போது, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்டவற்றில் பல்வேறு பணிகளை செய்து வந்தார்.

கடந்த 1973 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த ஜே.கே.ரித்திஷ், 1976 இல் ராமேஸ்வரத்திற்கு இடம்பெயர்ந்தார்.


டிப்ளமோ இஞ்னியரிங் படித்த அவர் தொழில் முனைவராக இருந்து வந்தார். பின்னர், சினிமா துறையில் சில காலம் இருந்தார். 2007 ஆம் ஆண்டு நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கிய கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர், 2008 இல் நாயகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2010 ஆம் ஆண்டில் பெண் சிங்கம் படத்தில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

இன்று இராமநாதபுரத்தில் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய ரித்திஷ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles