உலகம்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரேஞ் ஜூஸ்

ஒரேஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஒரேஞ் ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.


உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஒரேஞ் ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது.

காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஒரேஞ் ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் உள்ளன.

தினமும் ஒரேஞ் ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பாதிப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஒரேஞ்சுக்கு இருக்கிறது. அதில் இருக்கும் விட்டமின் சி சத்து இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்கும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது.

அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். இளமையை பாதுகாக்கும். கோடை காலங்களில் ஒரேஞ் ஜூஸ் அவசியம் பருக வேண்டும். சூரிய கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஒரேஞ் ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஒரேஞ் ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

ஒரேஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மூட்டு வலிக்கும் நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. ஒரேஞ் ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

Hot Topics

Related Articles