சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்குள் நிர்வாணமாக அத்துமீறி நுழைந்த யுவதியால் பரபரப்பு

அமெரிக்காவிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றுக்குள் அத்துமீறி புகுந்து நிர்வாணமாக நுழைந்த யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வேர்ஜீனியா மாநிலத்தின் ஸ்டஃபோர்ட் நகரில் கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான ஹீவன் கொனெர் எனும் யுவதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

இவர் அதிகாலை 5 மணியளவில் மேற்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்த நிலையில் வகுப்பறையொன்றில் முழு நிர்வாணமாக காணப்பட்டார் என அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

அவ்வேளையில் மேற்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு சிறார்கள் எவரும் வந்திருக்கவில்லை.
இது தொடர்பாக ஊழியர் ஒருவர் கூறுகையில், தான் அதிகாலையில் கடமைக்கு வந்து, வகுப்பறையொன்றிலுள்ள மின் விளக்குகளை ஒளிரச்செய்தபோது, திடீரென தன்னை நிர்வாணக் கோலத்தில் பெண்ணொருவர் எதிர்கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

தான் மேற்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரின் மனைவி என ஹீவன் கொனெர் கூறிக்கொண்டார். ஊழியர்களை பணியிலிருந்து விலகுமாறும் அவர் உத்தரவிட்டார்.

எனினும், அவருக்கும் மேற்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த யுவதி, வீட்டு வன்முறை தொடர்பான குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்து, விடுவிக்கப்பட்ட நிலையிலேயே சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்குள் நிர்வாணமாக காணப்பட்டார் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த யுவதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Hot Topics

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறந்து வைப்பு!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்  நினைவிடத்தை தற்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கிறார். இந்நினைவிட இந்திய மதிப்பில் 57.8 கோடி ரூபாய் செலவில், பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த...

இந்தியாவில் நான்கு பெண் வீராங்கனைகளுக்கு பத்மஸ்ரீ விருது!

இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் நான்கு பெண் வீராங்கனைகள் உட்பட விளையாட்டு துறையை சேர்ந்த 07 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை...

இலங்கையில் மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் அடையாளம்!

இலங்கையில் மாறுபாடு உடைய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இலங்கையில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி, டென்மார்க் மற்றும்...

Related Articles