நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை சமந்தா, அவரது அன்பில் வித்தியாசம் இருப்பதாக கூறியிருக்கிறார்.


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

கணவன் – மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. இந்த படத்தில் ஜோடியாக நடித்தது ஏன் என்று சமந்தா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.


’நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.


‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’. இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here