புத்தாண்டில் 50% சலுகையுடன் SLT மூலம் கொடுப்பனவுகள் பல

தமது வாடிக்கையாளர்களுக்காக எல்லா பண்டிகை நேரங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் பல கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகளை வழங்கும், இந்நாட்டு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை வழங்குவதில் முன்னோடியான ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) மூலம் வருகின்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக வழக்கம்போல் பல கொடுப்பனவுகளும் வழங்கப்படுகிறது.


SLT மூலம் வழங்கப்படுகின்ற சேவைகளை புதிதாகப் பொற்றுக்கொள்வது அல்லது தற்போது அந்த சேவைகளை பயன்படுத்துகின்ற நீங்கள் அதற்காக மேலும் மேலதிக சேவைகள் பெற்றுக்கொள்ளும்போது பாரிய சலுகையாக இலவசமாக பெற்றுக்கொடுக்கின்ற டேடா மற்றும் ரவுட்டர் மூலம் இந்த கொடுப்பனவை உரிமையாக்கிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிதாக SLT சேவையுடன் இணையும்போது, இணைப்புக் கட்டணம் 12,000 ரூபாவான single play எனும் அழைப்புக்கு மாத்திரம் பயன்படுத்துகின்ற இணைப்பு ஒன்று 6000 ரூபாவுக்கும், சாதாரண இணைப்புக் கட்டணம் 7000 ரூபாவான, இணைப்பு மற்றும் இணையதள சேவை வழங்குகின்ற Double Play (பிரோட்பாண்ட்) இணைப்புக் கட்டணம் 3500 ரூபாவுக்கும் இதன் கீழ் வழங்கப்படுகிறது.

அதேபோன்று double play (PEO TV) ஆகிய அழைப்பு மற்றும் PEO TV இற்காக ரூபா 11,000 ஆகிய சாதாரண இணைப்புக் கட்டணம் 5500 ரூபாவுக்கும், அழைப்பு, இணைதளம் மற்றும் PEO TV இற்காக 11,000 ஆகிய சாதாரண இணைப்புக் கட்டணம் 5500 க்கும், அழைப்பு, இணையத்தளம் மற்றும் PEO TV ஆகிய அனைத்தும் உள்ளடங்கலாக 10,000 ரூபாவாகிய Triple Play இற்காக 5000 ரூபாவாகவும் இந்த அனைத்து புதிய இணைப்புகளும் 50% குறைக்கப்பட்ட விலைக்கு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இந்த பண்டிகைக் காலத்தில் உங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்த சேவைகளில் புரோட்பாண்ட் சேவைகள் பெற்றுக்கொள்ளும்போது Web Family (வெப் பெமிலி) பெக்கேஜ் தொடக்கம் மேலுள்ள பெக்கேஜ்களுக்காக Wi-Fi ரவுட்டர் ஒன்றை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SLT மூலம் பண்டிகை காலங்களுக்காக இடம்பெறுகின்ற இந்த சிறப்புச் சலுகையில் புதிதாக இந்த சேவைகளை பெறுவதற்கு இணைகின்ற வாடிக்கையாளர்களுக்காக மாத்திரமன்றி, தற்போது அந்த சேவைகளை அனுபவிக்கின்ற தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இதுவரை பெறுகின்ற சேவைகளில் புதிய சேவை ஒன்றை இணைப்பதற்கு 'அப்கிரேட்' செய்வதற்கு 50% வரை குறைக்கப்பட்ட விலையின் கீழ் அந்த சேவைகளை வழங்குவதற்கு SLT நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி single play (அழைப்பு) பெக்கேஜ் தொடக்கம் double play (PEO TV) எனும் அழைப்பு மற்றும் PEO TV வரையும், அழைப்பு மற்றும் இணையதள சேவையை வழங்குகின்ற double play (புரோட்பாண்ட்) வரை அழைப்பு, இணையத்தளம் மற்றும் PEO TV ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய triple play பெக்கேஜ் வரையும் single play (அழைப்பு) பெக்கேஜ் தொடக்கம் அழைப்பு, இணையத்தளம் மற்றும் PEO TV ஆகிய அனைத்தும் உள்ளடங்கலாக triple play பெக்கேஜ் வரையும் புதிய சேவைகளை இணைக்கும்போது 6,990 ரூபாவான சாதாரண கட்டணத்திற்கு பதிலாக அதன் பாதியான 3495 ரூபாவுக்கு அதனைப் பொற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று double play (PEO TV) எனும் பெக்கேஜ் தொடக்கம் triple play பெக்கேஜ் வரை சேவையை விரிவுபடுத்தும்போது Broadband தொடக்கக் கட்டணம் முழுமையாக நீக்குவதற்கு இந்தப் பண்டிகை கொடுப்பனவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. single play இலிருந்து double play (Broadband) வரை சேவையை விரிவுபடுத்தும்போது Web Family (வெப் பெமிலி) பெக்கேஜ் தொடக்கம் மேலுள்ள பெக்கேஜ்களுக்காக WI-FI ரவுட்டர் ஒன்று இலவசமாக வழங்கப்படுவதோடு ஏனைய பக்கேஜ்களுக்காக 2990 ரூபாவான WI-FI ரவுட்டர் 990 ஆகிய குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தப் பண்டிகை கொடுப்பனவின் கீழ் உங்களுக்கு பிரத்தியேக டேடா கொடுப்பனவு ஒன்று உரித்தாகிறது. இதன்படி புதிய Broadband வாடிக்கையாளர்களிடம் முதல் மாதத்தில் சமூக ஊடகம் எனும் Social Media பயன்படுத்துவதற்கு பதில் 25 கிகாபைட் (25GB) இலவச டேடா வழங்கப்படும்.

அதேபோன்று புதிய இணைப்புக்காக முதல் 3 மாத காலம் முழுவதும் SLT Storage சேவையை இலவசமாக பெறுகின்ற வாய்ப்பு அந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக WI-FI கெமரா, Smart IR அலாம், Smart தொலைபேசி கட்டுப்பாடு, Smart பவர்பிளக் உட்பட வீட்டுப் பாதுகாப்பு தீர்வு ஆகிய Home Security Solution இனை 16,280 ரூபாவுக்கு இந்த பண்டிகைக் காலத்தில் SLT மூலம் வழங்கப்படும்.

இந்த அனைத்து கொடுப்பனவுகளும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும். SLT இன் இந்த பண்டிகைக் கொடுப்பனவு தொடர்பில் மேலதிக விபரங்களை பெறுவதற்கு அல்லது அதனை ஏனைய எந்த ஒரு சேவையை அல்லது உற்பத்தி தொடர்பில் தெரிந்துகொள்வதற்காக 24 மணி நேரமும் செயற்படுகின்ற வாடிக்கையாளர் அழைப்பு ஹொட்லைன் இலக்கம் 1212 மூலம் அல்லது www.slt.lk ஊடே SLT இணையத்தளத்திற்கு நுழைய முடியும்.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *