உலகம்

சமாதானக் கடிதங்கள் பிரதமர் ரணிலிடம் கையளிப்பு

சமாதான தொடர்பில் சேகரிக்கப்பட்ட கடிதங்களை தென்கொரிய அரசுசாரா நிறுவனம் ( HWPL) இலங்கை இளைஞர் முகாமில் வைத்து இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது.


இலங்கையில் வீரவிலயில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆதரவுடன் அண்மையில் மார்ச் 27 முதல் 30 வரை இளைஞர் முகாம் (யுவன்புர ) நிகழ்வு இடம்பெற்றது.

4 நாட்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளியூர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து சிறப்பித்தார்.


இந்த இளைஞர் முகாமில் தென்கொரிய அரசு சார்பற்ற நிறுவனமான ( HWPL) இளைஞர் முகாம் வளாகத்தில் பிரச்சாரத்திற்கென தற்காலிக குடில் அமைத்து இருந்தது.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆதரவுடன் தென்கொரிய அரசு சார்பற்ற நிறுவனமான HWPL இலங்கை இளைஞர் யுவதிகளிடம் இருந்து சுமார் 500 சமாதானம் தொடர்பான கடிதங்களை சேகரித்து அவற்றை இளைஞர் முகாம் நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles