உலகம்

வோர்னரால் நான் பெருமைகொள்கிறேன் – மனைவியின் உருக்கமான டுவிட்

ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வோர்னரால் மிகவும் பெருமையடைகிறேன் என அவரது மனைவி ட்விட்டரில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர். கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைப்பெற்றார்.

இதனால் கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இடம்பெறவில்லை.


தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இரண்டு போட்டியிலும் அரைசதம் அடித்த வோர்னர், ஆர்சிபி-க்கு எதிரான 3 ஆவது போட்டியில் சதம் விளாசினார்.


இந்நிலையில் தடைக்குப்பின் மிகப்பெரிய தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வோர்னரால், மிகவும் பெருமையடைகிறேன் என அவரது மனைவி கேண்டிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles