உலகம்

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா

தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பிரபலமான நடிகை பாவனா, தற்போது புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


கதாநாயகிகள் பெரும்பாலும் தங்கள் உடல்தோற்றம் குண்டானால் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள். அவர்களிடம் இருந்து பாவனா மாறுபட்டு இருக்கிறார். சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த பாவனா கடந்த 2010 ஆம் ஆண்டு அஜித்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார்.

அதன்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் 99 படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திருமண ஆன சந்தோ‌ஷத்தில் பாவனா தனது ஒல்லியான தோற்றத்திலிருந்து மாறி இருக்கிறார். சில மாதங்களாகவே அவர் இணையத் தளத்தில் அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற லெஹங்கா டிரஸ் மற்றும் சிவப்பு நிற சேலை, அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து குண்டான தோற்றத்தில் இருக்கிறார். பாவனாவின் இந்த தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Hot Topics

Related Articles