நடிகை ஏமி ஜாக்சனும், இங்கிலாந்து தொழிலதிபர் ஜோர்ஜுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே ஏமி ஜாக்சன் கர்ப்பமாகி இருக்கிறார்.


தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜோர்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜோர்ஜ் காதலை தெரிவித்ததாக ஏமி தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜோர்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜம்.

இந்நிலையில் எமியின் அறிவிப்பை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


ஜோர்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாவில் 3 ஆயிரத்து 600 கோடி ஆகும்.

ஏமி ஜாக்சனுக்கு திருமணம் என்றதுமே அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் தாயாகப் போவதால் கண்டிப்பாக சில காலத்திற்கு நடிக்க மாட்டார் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here