உலகம்

OPPO F11 Pro க்கான Pre-Order இலங்கையில் 

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட OPPO தொலைபேசியின் F தொடரின் புதிய வரவான, வாடிக்கையாளர்களுக்கு ‘Brilliant Portrait’ அனுபவத்தை வழங்கும் 48MP ultra-clear camera கட்டமைப்பைக் கொண்ட OPPO F11 Pro க்கான Pre-Order களை OPPO ஸ்ரீலங்கா ஆரம்பித்துள்ளது.


சிறந்த selfie செயற்பாட்டைக் கொண்ட F தொடருக்கு அப்பால் F11 Pro பல்வேறு புத்தாக்கமான தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.


குறிப்பாக புதிதாக rising கமரா, Panoramic திரை, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியை வழங்கக் கூடிய மெல்லிய வடிவமைப்பு என்பவற்றை இது கொண்டுள்ளது. Thunder Black மற்றும் Aurora Green இரட்டை நிறங்களில் கிடைக்கக் கூடிய OPPO F11 Pro 74,990 ரூபா விலையில் மார்ச் மாதம் 29ஆம் திகதி முதல் நாடுமுழுவதும் கிடைக்கிறது.

OPPO F11 Pro கையடக்கத்தொலைபேசியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட OPPO A5s ஸ்மார்ட் போன்களுக்கான Pre-Orders பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 13MP மற்றும் 2 MP கமரா, 2GB RAM, 32 GM ROM மற்றும் 6.2 அங்குலம் HD waterdrop திரை, A.I அழகு தொழில்நுட்பத்துடன் கூடிய 8 MP front camera, OS 5.2 வர்ணங்களைச் செயற்படுத்தக் கூடிய 4230 MAh பற்றரி என்பவற்றைக் கொண்டதாக இது காணப்படுகிறது.


OPPO A5s ஸ்மார்ட்போனும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் கிடைப்பதுடன், Black மற்றும் Red ஆகிய இரண்டு நிறங்களில் 29,990 ரூபா என்ற விலையில் கிடைக்கிறது.


Pre-Order வழங்கும் வாடிக்கையாளர்களுக்கு OPPO வர்த்தகநாமம் பொறிக்கப்பட்ட பை, Selfi stick>தமக்கு விருப்பமான பிரபலம் ஒருவரின் கையொப்பத்தைக் கொண்ட ரீ-ஷேர்ட் என்பனவும் வழங்கப்படும்.


OPPO F11 Pro மற்றும் A5s அபான்ஸ், டயலொக், சிங்ஹகிரி, டராஸ், OPPO அதிகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், மற்றும் OPPO தனித்துவமான காட்சியறைகளில் கிடைக்கிறன.

Hot Topics

Related Articles