உலகம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின ! எந்த மாணவர் முன்னிலையில் ?

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இதற்கமைய இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விசாக மகளீர் கல்லூரியின் மாணவி, நிலக்னா வர்ஸ வித்தான முதலாவது இடத்தை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை மூன்று பேர் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய விசாக மகளீர் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதியும், கம்பஹா ரத்னாவலி மகளீர் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரியும், மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா ஆகியோர் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.

ஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜோசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார். ஆறாவது இடத்தை ஐந்து பேர் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பு தேவிபாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோண், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் கவிரு மெத்னுக்க, காலி மஹிந்த கல்லூரியின் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகே, ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகாவும் ஆறாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles