உலகம்

“பிளாஸ்டிக் சக்கரம்” இலங்கை கடற்படையுடன் கைகேர்க்கும் ஜோன் கீல்ஸ் குழுமம்

மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வொன்றை வழங்குவதற்காக பிளாஸ்டிக் சக்கரம் இலங்கை கடற்படையுடன் இணைந்து முன்னோடிக் கருத்திட்டமொன்றை முன்னெடுத்தள்ளது.

பிளாஸ்டிக் சக்கரம், இலங்கை கடற்படையின் மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி பூச்சாடிகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் போன்ற பெறுமதி சேர் பொருட்களை தயாரிப்பதற்கு முன்மாதிரி செயற்பாடுகளின் அபிவிருத்தி மற்றும் பயிற்சிக்கு பங்களிப்பை வழங்குகின்றது. அத்துடன், இது தன்னையே தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம்கொண்டது.

இந்தக் கருத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 18 பெப்ரவரி 2019 அன்று, திலானி அழகரத்னம் – ஜோன் கீல்ஸ் குழுமம் தலைவர் – மனித வளங்கள், சட்டம், கூட்டிணைந்த சமூகப் பொறுப்பு, நிலைத்திருத்தல் மற்றும் இலங்கைக் கடற்படையின் தளபதி, துணை அட்மிரல் கே.கே.வி.பி.எச் டி சில்வா அவர்களினால் கைச்சாத்திடப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் இலங்கை கடற்படையின் கடல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினால் அபிவிருத்தி செய்யப்பட்டது. இங்குள்ள உருக்கும் அறை மற்றும் வடிவமைத்தல் அறைகள் மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை உருக்கி, செய்துவைக்கப்பட்டுள்ள அச்சுக்களைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் பொருட்களைச் செய்வதற்கு அனுமதிக்கின்றது.

இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்பக் கட்டம், களனி கங்கையின் கழிமுகத்திலும் காக்கை தீவுக் கடற்கரையிலும் பெருந்தொகையான பிளாஸ்டிக் கழிவுகள் அவதானிக்கப்படுவதனால், காக்கை தீவில் உள்ள கடற்படை முகாமில் தொடங்கப்படுகின்றது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்படையின் அங்கத்தவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட வாராந்த கடற்கரை சுத்தமாக்கல் செயற்பாடின் ஊடாக சேகரிக்கப்படுகின்றது. அதேவேளை இப்பிளாஸ்டிக் பொருட்களுடன் காணப்படும் மண் மற்றும் ஏனைய பதார்த்தங்களினால் இந்த மீழ்சுறழ்சியானது மிகக் கடுமையானது என்பதை நிரூபித்துள்ளது.

பிளாஸ்டிக் சக்கரம் இந்த செயன்முறையை மேம்படுத்தவதற்கு அவசியமான உபகரணங்களையும், அத்துடன் இயந்திரங்களை இயக்கும் நபருக்கு அவசியமான பாதுகாப்பு கியர்களையும் வழங்குவதில் ஈடுபட்டள்ளது. இந்த முன்மாதிரிக் கருத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டால், குறிப்பிட்டளவு மீள்சுழற்சி செய்யப்படாத பிளாஸ்டிக் கழிவுகள் சேரும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இக்கருத்திட்டத்தை விரிவாக்க முடியும். அத்துடன், இந்த வைபவத்தில் ரியர் அட்மிரல் என் பி எஸ் ஆட்டிகல – பணிப்பாளர் நாயகம் (தொழிற்பாடு), இலங்கை கடற்படை, திருமதி நிஸ்ரீன் ரஹமன்ஜீ – உப தலைவர் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் திரு புத்திக்க முத்துகுமாரண, வரி மற்றும் சமூக தொழில் முனைவோர் திட்டத்தின் தலைவர் என்பவர்கள் வருகை தந்திருந்தனர்.

பிளாஸ்டிக் சக்கரம் என்பது 7 வேறுபட்ட துறைகளில் 70 ற்கும் மேற்பட்ட கம்பனிகளைக் கொண்டிருக்கும் கொழும்பு பங்குப் பரிவர்த்தணையில் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் பிஎல்சி நிறுவனத்தினால் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிடில்சி நிறுவனத்தினால் 2017 ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட சமூக தொழில்முயற்சி கருத்திட்டம் ஆகும். கடந்த 13 வருடகாலமாக “ உயரளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்” எனத் தரப்படுத்தப்பட்ட ஜோன் கீல்ஸ் நிறுவனம், 13000ற்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புகளை வழங்குகின்றது. உலக பொருளாதாரப் பேரவை மற்றும் ஜக்கிய நாடுகளின் உலக ஒப்பந்தத்தில் முழுமையான அங்கத்தவராக இருப்பதுடன், ஜோன் கீல்ஸ் அமைப்பின் ஊடாக “ நாளைய தேசத்தை வலுவூட்டுதல்” எனும் தொலைநோக்குடன் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொழிற்படுகின்றது.

Hot Topics

Related Articles