அமைதி மற்றும் போர் நிறுத்தம் (DPCW) பிரகடனத்தின் 3 ஆவது ஆண்டு நினைவு தினம் நியூயோர்க், டெல்லி, பிராங்போர்ட், சிட்னி, கேப்டவுன், இஸ்தான்புல், சியோல், டோக்கியோ மற்றும் லண்டன் போன்ற உலகெங்கிலும் உள்ள 83 முக்கிய நகரங்களில் இம் 14 ஆம் திகதி நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது DPCW தனது 38 உட்பிரிவுகள் அடங்கலான 10 கட்டுரைகள் அடங்கிய ஆவணத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் அத்துன் தற்போதைய சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொண்டது.
அமைதி மற்றும் போர் நிறுத்தம் (DPCW) பிரகடனத்தின் 3 ஆவது ஆண்டு நினைவு தினத்தின் ஒரு பகுதியாக, “சமாதான கடித பிரச்சாரம்” என்ற தலைப்பில் சமாதான முயற்சி மற்றும் சமாதான முயற்சிக்கான உள்நாட்டு ஆதரவைப் பெறுவதற்காக உலகளாவிய ரீதியில் குறித்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தின் இறுதி இலக்கு, உலக நாடுகளின் தலைவர்கள், உலக சமாதானத்திற்காக நிலைத்திருக்கும் கொள்கைகளை உள்ளடக்கிய, அமைதி மற்றும் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் அடிப்படையில் சமாதான சூழலை அமைப்பதை அனுமதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.