20 வயதுப் பிரிவு எல்லே பேட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி யாழ்.கல்வி வலய சம்பியனானது.
யாழ். கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 20 வயதிற்குட்பட்டோருக்கான எல்லே போட்டியின் இறுதிப் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி, புத்தூர் வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தை எதிர்கொண்டது.
முதலில் தடுத்தாடிய புத்தூர் வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயம் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைவரும் ஆட்டமிழந்தனர்.
பதிலுக்கு ஆடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியினரும் 3 ஓட்டங்களையே பெற்று ஆட்டமிழந்தனர்.
மேலம் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கு 10 பந்துகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் கிங்சன் ஒரு ஓட்டத்தைப்பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு ஆடிய விக்கினேஸ்வரா வித்தியாலயத்தால் ஓட்டமெதுவும் பெற முடியவில்லை. இறுதியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி யாழ். கல்வி வலய சம்பியனானது.