உலகம்

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது

யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி யாழ். மத்திய கல்லூரி அணியை 04:00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.


சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக லியோ 3 கோல்களையும் றொவான்ஸன் ஒரு கோலையும் போட்டனர்.

இதேவேளை, 18 வயது பிரிவில் யாழ் மத்திய கல்லூரி அணியினர் சமூகளிக்காத காரணத்தினால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.


இந்நிலையில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் சாந்தனின் சிறப்பான ஆட்டத்தினால் யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போதிட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரியை 01: 00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.


3 பிரிவுகளுக்குமான போட்டி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles