பிள்ளைகள் தேவையா மற்றும் எப்போது தேவை என்பதனை தீர்மானிப்பதற்கு தம்பதியர் வலுவூட்டப்பட்டிருக்கும் போது, பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளடங்கலாக, அவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த முழுமையான ஆற்றலை அடைவதற்கு அது உதவுகின்றதென இலங்கையில் திட்டமிடப்படாத கர்ப்பந்தரித்தல்கள் தொடர்பில் செயற்படுவதற்கான தேவையை சுட்டிக்காட்டும் குடும்ப கட்டுப்பாடு 2020 இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெத் ஸ்க்லெக்டர் தெரிவித்தார்.


குடும்பக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் குடும்பக்கட்டுப்பாடு 2020 செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெத் ஸ்க்லெக்டர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்திருக்கின்றார்.

இந்நிலையில் அதனையொட்டி நேற்றைய தினம் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள குடும்பக் கட்டுப்பாடு -2020 இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெத் ஸ்க்லெக்டர் மேலும் தெரிவிக்கையில்,

உரிமைகள்சார் குடும்பத் திட்டமிடலில் முதலீடு செய்வதற்கு அரசாங்கங்கள், சிவில் சமூகம், பல்தரப்பு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், தனியார்துறை மற்றும் ஆய்வு மற்றும் அபிவிருத்திச் சமூகம் என்பவற்றை ஒன்றாக கொண்டு வருவதன் மூலம் இதனை யதார்த்தமாக்குவதற்கு உழைக்கும் ஒரு உலகளாவிய பங்காளித்துவமாக குடும்ப கட்டுப்பாடு 2020 இன் பங்களிப்பாகவுள்ளது.

அனைத்து கர்ப்பந்தரித்தல்களும் திட்டமிடப்பட்டதாக இருப்பதனை உறுதி செய்வதற்கான தேவையை வலியுறுத்தினார். “குடும்பத்திட்டமிடல் வாழ்க்கையை காக்கின்றது.

2018 இல், நவவீன கருத்தடை முறை பயன்பாட்டின் விளைவாக, இலங்கையில் திட்டமிடப்படாத கர்ப்பந்தரித்தல்கள் தொடர்பில் செயற்படுவதற்கான தேவையை சுட்டிக்காட்டும் குடும்ப கட்டுப்பாடு 2020 இலக்கு வைக்கப்பட்ட 69 நாடுகளில், 119 மில்லியன் எதிர்பாராத கர்ப்பந் தரித்தல்கள் தடுக்கப்பட்டன, 20 மில்லியன் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கள் தவிர்க்கப்பட்டன, அத்துடன், 137 ஆயிரம் பிறப்பின் போதான இறப்பு என்பன தடுக்கப்பட்டன”என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய சுகாதார அமைச்சின், குடும்ப சுகாதார பணியகத்தினைச் சேர்ந்த வைத்தியர் சஞ்சீவ கொடகந்த,

“கடந்த பல வருடங்களில் குடும்பத் திட்டமிடல் சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இலங்கை எட்டியுள்ளது. பிராந்தியத்தைச் சேர்ந்த ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சிறந்த குறிகாட்டிகளைக் கொண்டிருக்கின்றது.

எவ்வாறாயினும், அண்மைக் காலத்தில் இந்த செயற்பாட்டில் தேக்கத்தை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இது சுகாதார நிலைமையில் மாத்திரமன்றி, ஒட்டுமொத்த சமூக நலனிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இருந்த போதிலும், எட்ட முடியாத தூரத்தில் உள்ளவர்களை அடைந்து, பெண்கள் மற்றும் பருவமானவர்களுக்கு பாலியல் மற்றும் இனவிருத்திச் சுகாதாரம் குறித்த நேர்த்தியான தகவல்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது” எனக் கூறினார்.

இலங்கையின் சிறந்த தேர்ச்சிக்கும் மத்தியில், இலங்கையில் உள்ள திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் கருத்தடையைப் பயன்படுத்துவதில்லை எனவும், குடும்பத் திட்டமிடலுக்கான எட்டப்படாத தேவையாக 7.3 சதவீதம் உள்ளமையையும் 2016ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் சுகாதார ஆய்வு கண்டறிந்தது. மேலும், பருவமானோர் கருவள வீதமானது ஆயிரத்திற்கு 30ஆக இருந்தது. கடந்த சில தசாப்தங்களில் இது தேக்கநிலையாக உள்ளது. துணை தேசிய வேறுபாடுகளான 5-8 சதவீதத்துடன் பார்க்கும் போது, பருவமானோர் கர்ப்பந்தரிக்கும் அளவு 4.6 சதவீதமாக இருக்கின்றது.

இதன் விளைவாக, இலங்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கான எவ்வித அண்மைய ஆதாரங்களும் இல்லாத நிலையில், நாளாந்தம் 650 பாதுகாப்பற்ற கருக்கலைப்பு இடம்பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்களினால் 80 வீதமானவை அணுகப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சிசு இறப்பு வீதங்களுக்கான இரண்டாவது பிரதான காரணமாக அமையும் வகையில், 10-13 சதவீதம் தாய்வழி இறப்பு பதிவாகுவதாக கருக்கலைப்புக்குப் பின்னரான பராமரிப்பு தொடர்பான 2015ஆம் ஆண்டு தேசிய வழிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. சட்டர ரீதியான கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கள் பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமியரின் வாழ்வில் தொடர்ந்தும் ஆபத்தாக உள்ளன.

பாதுகாப்பற்ற கருக்கலைப்பை குறைக்க வேண்டுமெனில் அதை தடுப்பது அவசியம் கர்ப்பந்தரித்தலை தவிர்க்க வேண்டிய பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் மிக்க குடும்பத் திட்டமிடல் முறைகளுக்கான அணுகும் வசதி இருத்தல் வேண்டும். தமது சொந்த உடல்கள் குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரம் மற்றும் தமது கருவளத்தை முகாமை செய்வதற்கான தரமான பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகள் மற்றும் விநியோகம் பற்றிய அறிவும், அணுகும் வசதியும் அவர்களிடம் இருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

உரிமைகள் மற்றும் தெரிவுகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்திய, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி ரிட்சு நெக்கன்,


“குடும்பத் திட்டமிடல் என்பது மனித உரிமையாகும். குழந்தைகள் தேவையா, அவ்வாறாயின் எப்போது மற்றும் எந்த கால இடைவெளியில் குழந்தைகள் வேண்டும் என்பதனை சுதந்திரமாக தீர்மானிப்பதற்கான உரிமை மற்றும் தெரிவினை தனிநபர்கள் கொண்டுள்ளனர்.

நவீன கருத்தடை முறைகளுக்கான அணுகும் வசதியை அதிகரிப்பது, திட்டமிடப்படாத கர்ப்பந் தரித்தல்களை தடுப்பதுடன், பாதுகாப்பற்ற கருக்கலைப்பையும் தவிர்க்கும். ஐக்கிய நாடுகளின் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார நிறுவனம் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆனது, திட்டமிடப்பட்டதாக அனைத்து கர்ப்பந்தரித்தல்களும் அமைவதனை நோக்கி பணியாற்றி வருகின்றது.
இலங்கையில் குடும்பத் திட்டமிடலில் எட்டப்படாத தேவைகளை அடைவதற்கு நாம் தொடர்ந்தும் சுகாதார அமைச்சிற்கு ஆதரவு வழங்குவோம்” என்றார்.

உரிமைகள் சார் குடும்பத் திட்டமிடலில் முதலீடு செய்வதன் மூலம் பெண்களை வலுப்படுத்துவதற்கான குடும்ப கட்டுப்பாடு 2020 உலகளாவிய பங்காளித்துவத்தில் பிரதான பங்காளராக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் உள்ளது.


தரமான குடும்பத் திட்டமிடல் சேவைகளை வழங்குவதற்கு சுகாதார சேவை வழங்குபவர்களின் ஆற்றலை வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது. தேசிய தொகுதி ஒன்றை உருவாக்குவதனை நோக்கிய ஆய்வுகளையும் முன்னெடுக்கின்றது. மேலதிகமாக, பாடசாலைகளில் முழுமையான பாலியல் கல்வியை வழங்குவதற்கு ஆசிரியர்களின் சேவைக்கு முன்னரும், சேவையின் போதும் ஆற்றலை அதிகரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சனத் தொகை நிதியம் உதவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here