உலகம்

கனேடிய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர்

கனேடிய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனடாவில் கடந்த மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற இடைத்தேர்தல் நடை பெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் (வயது 40) வெற்றிபெற்றார்.

இதையடுத்து அவருக்கு பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் கனடா பாராளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் வெள்ளை நிறத்தவரல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பை பெற்று, கனடா அரசியலில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

தலையில் ‘டர்பன்’ அணிந்து பாராளுமன்றத்திற்குள் ஜக்மீத் சிங் நுழைந்தபோது, அவை உறுப் பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Hot Topics

Related Articles