கவிஞர் க.தங்மணியின் பட்டினிப்பாலை நூல் அறிமுக விழா 16-03- 19 அன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.


சிங்கப்பூரின் தமிழ் அமைப்பான கவிமாலை நிகழ்வை ஒருங்கிணைத்தது.

நிகழ்வை தலைமையேற்று நடத்தினார் கவிமாலையின் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன்.சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்களத்தின் தலைவர் முனைவர் இரத்தின.வேங்கடேசனவாழ்த்துரை வழங்கினார்.நூலை யுனிவர்செல் மோபைல்ஸ் திரு சுதன் அறிமுகம்செய்தார்.

முதல்படி பெற்று வாழ்த்தினார் திரு.கி.திருமாறன் நிகழ்வை கவிஞர் லலிதாசுந்தர் தொகுத்து வழங்கினார்.

இந்த பட்டினிப்பாலை நூலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யமுயன்றிருக்கிறேன் என்றும்,பலகோடி பக்கங்களை கொண்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை படி எடுத்து கொடுத்திருக்கிறேன் அதுதான் பட்டினிப்பாலைஎன்றும்  தன் ஏற்புரையில் கூறி நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

நூலாசிரியர் க. தங்கமணி. நிகழ்விற்கு பலரும் வந்திருந்துதார்கள். கவிமாலை கவிஞர்கள், மாதவி இலக்கிய மன்றத்தின் தலைவர் NR. கோவிந்தன் மற்றும் அதன் உறுப்பினர்கள், தமிழறிஞர் சுப.திண்ணப்பன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. நெடுஞ்செழியன் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here