உலகம்

நெதர்லாந்தில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு ; 3 பேர் பலி : துருக்கி ஆயுததாரி கைது

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் பலியாகினர்.


இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட 37 வயதான துருக்கியைச் சேர்ந்த ஆயுததாரி நெதர்லாந்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் நேற்றுக் காலை வேலைக்கு செல்ல டிராம் வாகனத்தில் பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


அப்போது, டிராம் வண்டிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். அதன்பின் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த நெதர்லாந்து பொலிஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


இந்நிலையில், நேற்று மாலை நிலவரப்படி இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 9 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்களில் 3 பேர் நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நெதர்லாந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

Hot Topics

Related Articles