உலகம்

பேரெழுச்சிகொண்டது இலங்கையின் கிழக்கு ! நீதி கோரி ஓரணியில் திரண்ட உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியும் ஹர்த்தால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாநகரில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவிகளின் போராட்டமும் ஹர்த்தாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்தப் பேரணியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சியினர், வடக்கு – கிழக்கில் உள்ள பொது அமைப்பினர், பல்கலைக்கழகச் சமூகத்தினர், கல்விச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.


இதேவேளை, கடந்த சனிக்கிழமை ( 16.03.2019) யாழ்.மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் பேரணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles