இலங்கையில் பாற்பண்ணை உற்பத்தியை அதிகரிக்க பிரஞ்சு நிறுவனமான பொக்காட்டுடன் விவசாய கிராமிய பொருளாதார விவகார கால்நடை அபிவிருந்தி நீர்பாசனம், மீன் பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது.
இவ்வொப்பந்தம் , இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லபேட் முன்னிலையில் , கைச்சாத்தானது.
இவ்வொப்பந்தத்தின் கீழ் பிரான்ஸ் அரசிடமிருந்து 13.9 மில்லியன் யூரோ (2514 மில்லியன் இலங்கை ரூபா ) இலகு கடன் திட்டத்தின் கீழ் கிடைக்க உள்ளதுடன், இதனை இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் மேற்பார்வை செய்யவுள்ளது.
கடுவெல, அத்தனகல , வாரியப்பொல , பொலன்நறுவை , வென்னப்புவ மற்றும் மட்டக்களப்பிலுள்ள , சிறிய பாற்பண்ணை நிறுவனங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு தரமுயர்த்தப்படவுள்ளன.
இதன்படி ஒரு நாளுக்கு 4500 லீற்றர் பால் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிலுள்ள பொக்காட் நிறுவனம் 35 நாடுகளில் 3500 ஊழியர்களை கொண்டதாகும். பொக்காட் நிறுவனம் இலங்கையில் பால் சேகரிப்பு தயாரிப்பு பொதியிடல் , மற்றும் பால் பண்ணையாளர்களுக்கு பயிற்சி என்பவற்றை வளங்கவுள்ளது.
இலங்கை அரசு 2020 இல் பால் உற்பத்தியில் தன்னிறைவை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.