உலகம்

HNB – ஜோன் கீல்ஸ் புரொபர்டீஸுடன் இணைந்து TRI-ZEN இல் பெண்களுக்கான வீட்டுக் கடன் அறிமுகம்

வெக்ஷோல் வீதியில் அமைக்கப்படும்ரூபவ் ஜோன் கீல்ஸ் புரொபர்டீசின் புதிய திட்டமான TRI-ZEN அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் முதலீடு செய்ய விரும்பும் பெண்களுக்காக, இலங்கையின் முன்னணி சில்லறை வங்கியான HNB கவர்ச்சிகரமான வீட்டுக்கடன் திட்டத்தை பிரத்தியேகமாக பெண்களுக்கென அறிமுகப்படுத்தியுள்ளதாக மார்ச் 12ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் அறிவித்துள்ளது.

Roshanie Jayasundera-Moraes, Chief Marketing Officer at John Keells
Properties and Dilshan Rodrigo, Chief Operating Officer, Hatton National Bank

இந்தக் கூட்டிணைவு, வீடொன்றை சொந்தமாக வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் வசதியையும் வரப்பிரசாதத்தையும் வழங்குகிறது.

நகர்ப்புற தொழில்சார் துறைகளில் பெண்களின் பங்களிப்பு பெரியது. தொழிற்துறையின் தேவையை உணர்ந்து வரும் பெண்கள், தமது சேமிப்பின் உயர்பெறுமதியாக, தமக்கென சொந்த வீட்டை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

பெண்களின் வளர்ந்துவரும் இந்த ஆர்வத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், பெண் முதலீட்டாளர்களுக்காக, TRI-ZEN வீட்டுத்தொகுதியில் வீடொன்றை சொந்தமாக கொள்வனவு செய்வதற்காக, HNB ஜோன் கீல்ஸ் புரொபர்டீஸுடன் இணைந்து, நீண்டகால வீட்டுக்கடன் திட்டத்தை பிரத்தியேகமாக தமது பெண் வாடிக்கையாளர்களுக்காகவென அறிமுகப்படுத்தியுள்ளது.


கவர்ச்சிகரமான இந்த வீட்டுக்கடன் திட்டத்தின் ஊடாக, இந்த வீட்டுமனைத் தொகுதியிலுள்ள வீட்டின் கொள்முதல் பெறுமதியில் 80 வீதத்தை கடனாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அந்தக் கடனை மீள செலுத்துவதற்கான காலம் 25 வருடங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 10 வருடங்கள் வரை நிர்ணயிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன், மூலதனத்தை செலுத்துவதற்கான தயவுக்காலம் 5 வருடங்களாகும்.

முன்பதிவுகளுக்காக கொள்முதல் விலையில் 5 வீதத்தையே செலுத்த வேண்டியிருப்பதுடன் முதலீட்டாளரினால் 15 வீத ஒதுக்கீட்டுக் கட்டணத்துடன் 3 நாட்களில் கடன் ஒப்புதல் செயன்முறையைத் தொடர்ந்து வீட்டை பாதுகாக்க முடியும்.


புதிய கட்டுப்படியானதும் தொந்தரவுகளற்றதுமான HNB இன் இந்த வீட்டுக்கடன் திட்டத்தை, நாடு முழுவதும் செயற்படும் 251 கிளை வலையமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். வீட்டை விலைக்கு வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவருக்கிடையிலான தொடர்பை மேம்படுத்தும் வகையில், அர்ப்பணிப்புமிக்க இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி வீட்டுக்கடனை செயல்படுத்துவதற்கும், அதனை பெற்றுக்கொள்வதற்கும் சரியான வழிகாட்டல்களை வழங்கும் வகையில் வீட்டுக்கே வந்து சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கக்கூடியவாறு தனிப்பட்ட ரீதியிலான ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோன் கீல்ஸ் புரொபர்டீஸின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் அதிகாரி திருமதி. ரோஷானி ஜயசுந்தர மொராயஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒரு பெண் என்ற வகையில் எங்களது குடும்பம் உட்பட வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் நாம் சமநிலைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு நாம் எங்கு வாழ்கிறோம் என்பதே பிரதான விடயமாகும். நாம் பாடசாலைக்கு அருகிலோ அல்லது பணியிடத்திற்கு அருகிலோ வாழலாம்.


அதனாலேயே TRI-ZEN மிகவும் நடைமுறையான மற்றும் பொருளாதார ரீதியான தீர்வை வழங்குகிறது. மேலும் இதனை மேம்படுத்துவதற்காக HNB கவர்ச்சிகரமான வீட்டுக்கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

HNB இன் சிரேஷ்ட முகாமையாளர், PFS இன் தலைவர் திரு.காஞ்சன கருணகம,

“மிகவும் கட்டுப்படியான மற்றும் தொந்தரவுகளற்ற HNB இன் வீட்டுக்கடன் திட்டம் சாத்தியமான சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்களது நிதிச்சுமைகளை இலகுவாக்குகிறது. சொத்துச் சந்தையில் பெண்களுக்கு பெருகி வரும் பங்களிப்பை கருத்திற்கொண்டு குறிப்பாக TRI-ZEN இல் முதலீடு செய்ய ஆர்வமுள்ள பெண்களுக்கு ஜோன் கீல்ஸுடன் இணைந்து வியத்தகு அற்புதமான வெகுமதியை HNB வழங்குகிறது” என்று தெரிவித்தார்.

TRI-ZEN ஆனது 2023ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள, ஜோன் கீல்ஸ் புரொபர்டீஸ் மற்றும் இந்திரா டிரேடர்ஸ் பிரைவட் லிமிடட் கூட்டாக இணைந்த ஒரு முயற்சியாகும். 53 மாடிகளைக் கொண்ட இந்த பிரமாண்ட அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி, வேறெங்குமில்லாத அளவுக்கு வசதிகளை கொண்டுள்ளது.

ஏற்கனவே உள்ள HNB இன் வீட்டுக்கடன் திட்டங்களுக்கு மேலதிகமாக, தமது பெண் வாடிக்கையாளர்களுக்காகவே பிரத்தியேகமாக கடனட்டை சலுகைகளை, கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்கள், சட்ட மற்றும் பிற ஆவணப்படுத்தல் உதவிகள், விசுவாச அட்டை சலுகைகள், வீட்டு மேம்பாட்டுக் கடன்கள் மற்றும் பிற விஷேட சலுகைகளையும் வழங்குகிறது.
HNB அஷுரன்ஸின்; விஷேட காப்புறுதித் திட்டத்தின் ஊடாக, பெண்களுக்காகவென பிரத்தியேகமான முறையில் அடமானக் குறைப்புத் திட்டம், கடன் பாதுகாப்புத் திட்டம், ஆயுள் காப்புறுதி மற்றும் மருத்துவக் காப்பீடு என்பனவும் வழங்கப்படுகின்றன.

HNB கடனட்டைகளின் பெண் வாடிக்கையாளர்களும் TRI-ZEN அடுக்குமாடிக் குடியிருப்புக்குரிய இந்த விஷேட கடன் திட்டத்தின் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த சலுகைகளில் முதல் வருடாந்த கட்டண விலக்கு, வருடாந்த செலவினத்திற்கு ஏற்ற வகையில் இலவச ஆயுட்கால கடனட்டை, ஆடை விற்பனையகம், சுப்பர் மார்க்கட்டுகள், ஏனைய பெண்களின் உற்பத்திப்பொருள் கடைகளில் வருடாந்த தள்ளுபடிகள், செலவிடப்படும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் பணத்தை மீளச்செலுத்துவதற்கான வாய்ப்பு, 10,000 ரூபாவிற்கு மேற்பட்ட கொள்வனவிற்கு வட்டியில்லாத 12 மாதங்கள் வரையிலான தவணைக்கட்டண முறை போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மிகப்பெரிய தனியார்துறை வர்த்தக வங்கியான HNB பீ.எல்.சீ, நாடளாவிய ரீதியில் 251 வாடிக்கையாளர் நிலையங்களைக் கொண்டுள்ளது. மதிப்புமிக்க பிரித்தானிய நிதிச் சஞ்சிகையான The Banker இனால், உலகத்தின் மிகச்சிறந்த 1000 வங்கிகளுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டதுடன், நாட்டின் மிகச்சிறந்த உள்நாட்டு வங்கியாக பட்டியலிடப்பட்டது.

மதிப்புமிக்க பிரித்தானிய நிதிச் சஞ்சிகையான The Banker Magazine இனால், 2018 இன் மிகச்சிறந்த சில்லறை வங்கியாக HNB பிரகடனப்படுத்தப்பட்டது. Asiamoney awards-2018 இல் இலங்கையின் மிகச்சிறந்த SME வங்கி, மிகச்சிறந்த டிஜிட்டல் வங்கி, மிகச்சிறந்த பண முகாமைத்துவ வங்கி ஆகிய விருதுகளையும் HNB பெற்றுக்கொண்டது.

Hot Topics

Related Articles